12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது. மரகதத்தால் ஆன மூலவர்...!!
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் காசியே முதன்மையானது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. தொழில் அதிபர்களான பிர்லா குடும்பத்தினர் இக்கோயிலை 1966-ஆம் ஆண்டில் கட்டி காசி விஸ்வநாதருக்கு] அர்ப்பணித்தனர். இக்கோயில் கோபுரம் 250 அடி உயரம் கொண்டது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை தில்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில் 1194-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக் என்ற அடிமை வம்ச மன்னரும், 1447-1458 இடைப்பட்ட காலத்தில் ஜவுன்பூர் சுல்தான் உசைன் ஷா ஷர்க்கியாலும், பிறகு அவுரங்கசீப்பாலும் இடித்துத் தள்ளப்பட்டதுடன், இடித்த இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் எழுப்பப்ப்பட்டது.
1931-ஆம் ஆண்டில், இந்திய விடுதலை இயக்க வீரரான பண்டிட் மதன் மோகன் மாளவியா என்பவரால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் காசி விஸ்வநாதர் கோயில் கட்டிட அமைப்பில் கோயிலை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது.இக்கோயில் கட்டுவதற்கு பிர்லா குடும்பத்தினர் நிதியுதவி அளித்தனர். இக்கோயிலை கட்ட 35 ஆண்டுகள் ஆனது. 1966-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 77 மீட்டர் ஆகும். இது இந்தியாவில் மிகவும் உயரமான கோயில் ஆகும். இக்கோயில் பளிங்குக் கல் மற்றும் மணற்கற்களால் கட்டப்பட்டது.
தரை தளத்தில் இக்கோயில் மூலவரான காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளது. முதல் தளத்திதில் அண்ணபூரணி, நடராசர், துர்கை, அனுமார், இலக்குமி நாராயணன், விநாயகர், நந்தி மற்றும் பைவரர் ஆகிய தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளது. கோயில் உட்புறச் சுவர்களில் பகவத் கீதையின் சுலோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி என்னும் ஊரில் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தொடர்வண்டி மூலம் காசியை சென்று அடையலாம். காசியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் காசியே முதன்மையானது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனிச்சிறப்பு. இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் உள்ள கருவறையின் தங்க மேடையில் லிங்க ரூபியாக சிவபெருமான் அருள்புரிகிறார். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமானின் திருவுருவமும் இங்கு அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும். கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது என்பது நம்பிக்கை.
காசியில் இறந்து போனால் சொர்க்கத்தை அடைவார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம் மற்றும் ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் நம்பிக்கை. இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து இறைவனுக்கு மரியாதை செலுத்துகின்றனர். கங்கா ஆரத்தி : காசியில் மற்றொரு சிறப்பம்சம் கங்கை நதியை வணங்கும் வகையில் தினந்தோறும் கங்கா ஆரத்தி எடுக்கப்படும். காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று கங்கா ஆரத்தி.
தீர்த்தக் கட்டங்கள் : கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக்கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும்.
இத்தலத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி, ஹோலிப்பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.