திருப்பதி தரிசனத்துக்கு வர விரைவில் 100 மின்சார பேருந்துகள்- போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் ஒப்புதல்

ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு வர முடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்தது.

Update: 2021-06-22 06:53 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான குழு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலர் முன்பதிவு மேற்கொண்ட நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.

இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் செயல்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கொரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு வர முடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்தது. மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் தற்போது திருமலை கிரீன்ஹில்ஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் வாங்க போக்குவரத்து கழகத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags:    

Similar News