சந்திர கிரகணத்தால் மாற்றம்: கவனமாக இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள்
சந்திர கிரகணத்தால் ஜோதிட ரீதியாக ஏற்படும் மாற்றத்தால் நான்கு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.;
சந்திர கிரகணத்தால் மாற்றம்: கவனமாக இருக்க வேண்டிய நான்கு ராசிக்காரர்கள் குறித்து, அறிவோம்.
சித்ரா பவுர்ணமி நாளில் முழு சந்திர கிரகணம் வருகிறது. இந்தியாவில் தெரியாது என்றாலும், ஜோதிட ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் நிர்வாகி சீனிவாச சித்தர் அளித்துள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம்:
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம். அதாவது, சூரிய ஒளியால் ஏற்படும் பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும் நிகழ்வு. மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த ஆண்டிற்கான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அறிவியல் ரீதியாக ஏற்படும் இந்த நிகழ்வுகளுக்கு ஜோதிட ரீதியாக அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில், கிரக நகர்வினால் நான்கு ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திர கிரகணம் எங்கு? எப்போது?
மே 5 ஆம் தேதி, ஆண்டின் இரண்டாவது கிரகணம் நடைபெறுகிறது. இந்த சந்திர கிரகணம் ஒரு நிழல் சந்திர கிரகணமாக இருக்கும். அது இந்தியாவில் காணப்படாது. இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இருக்கும். இந்த கிரகணம் இந்திய நேரப்படி இரவு 8.45 மணி முதல் அதிகாலை 1 மணி01 சந்திர கிரகணத்தால் மேஷம், ரிஷபம், சிம்மம், கடகம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்:
சந்திர கிரகணத்தின்போது மேஷ ராசியினர் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இதனால் தவறான முடிவுகளை கூட எடுக்க தயங்கமாட்டீர்கள். பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கும். புதிய நபர்களால் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாகன பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். நண்பர்களுக்கு இடையில் கருத்துமோதல் வரலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் சந்திர கிரகணத்தின்போது யாருடன் பேசுவதாக இருந்தாலும் வார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. ஒருவேளை அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டால் உறவுகள் பிரியும் சூழ்நிலை வரும். ஒருசிலர் குடும்ப சூழலை சமாளிக்க கடன் வாங்க வாய்ப்புள்ளது. வேலையிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பீர்கள். இதனால் வேலை பறிபோகும் சூழலும் எழலாம்.
சிம்மம்:
நேரம் சுத்தமாக சரியில்லாததால், இந்த சந்திர கிரகணத்தின் போது சிம்ம ராசியினர் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கூர்மையான ஆயுதங்களை கையாளும் எச்சரிக்கை வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தவொரு முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்க வேண்டும்.
கடகம்:
சந்திர கிரகணத்தின் போது கடக ராசியினர் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தடை, தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் சண்டை வரலாம். பணத்தை கொடுத்த ஏமாற வாய்ப்புள்ளது. எனவே புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சீனிவாச சித்தர் தெரிவித்துள்ளார்.