பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்
கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.
மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று தமிழ் மாதமான கார்த்திகை பிறந்துள்ளது. இதையொட்டிமுன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் மேற்கொள்வது வழக்கம்.
ஐயப்ப பக்தர்கள், இன்றில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வது வழக்கம்.
அவ்வகையில் திருப்பூர் பகுதிகளில் ஏராளமானோர் அதிகாலையில் கோவிலுக்கு சென்று, மாலை அணிந்து விரதத்தை முறைப்படி தொடங்கினர். திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், அதிகாலையில் பக்தர்கள் அதிகளவில் வந்து, சன்னதியில் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டன்ர். அப்போது, சாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷமிட்டனர்.
இதேபோல், திருப்பூர் நகரில் உள்ள பல்வேறு கோவில்களிலும் அதிகாலையிலேயே சரண கோஷங்களின் முழக்கம் கேட்கக் தொடங்கின. குடும்பத்தினருடன் பலரும் வந்து மாலை அணிந்து, சபரிமலை ஐயப்பனுக்கு விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கியுள்ளனர்.