உலக நன்மை வேண்டி மேல் மருவத்தூர் அம்மனுக்கு 501 பால்குட அபிஷேகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பில் பெண்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக நகர வீதிகளில் வந்தனர் .;

Update: 2023-08-15 13:00 GMT

காஞ்சிபுரம் தாமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள ஆன்மீக மன்ற பெண்கள் இணைந்து நடத்திய உலக நன்மை வேண்டி பால் கூட மற்றும் கஞ்சி கலயம் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில். இங்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக முழுவதும் இருந்தும் ஆன்மீக பக்தர்கள் வந்திருந்து அங்குள்ள ஆதிபராசக்தி அம்மனையும், பங்காரு அடிகளாரையும், தரிசனம் மேற்கொண்டு செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில்  காஞ்சிபுரம் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றங்கள் சார்பில் கஞ்சிக் கலய பால்குட, மனிதநேய தேசபக்தி ஆன்மீக ஊர்வலம்  காஞ்சிபுரம் டி. கே. நம்பி தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வார வழிபாடு மன்றத்திலிருந்து ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக 501 பெண்கள் பால்குடம் ஏந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்துகொண்டு ஊர்வலத்தினை துவக்கி வைத்தார் .

இறுதியாக தமல்வார் தெரு பகுதியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மேல்மருவத்தூர் அம்மன் சிலைக்கு ,  சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் கலந்து கொண்டு பால் அபிஷேகத்தை துவக்கி வைத்த பின்,  பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள் தங்கள் திருக்கைகளாலேயே பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர் .

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது . வழிபாட்டு மன்ற மாவட்ட தலைவர் வேலு,  இளைஞர் அணி தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News