முருகனின் அலங்கார வழிபாடு சிறந்ததா- கற்சிலை வழிபாடு சிறந்ததா?

அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது ஒரு மெய்ஞானம் உண்டாகும் -ஞானிகளெல்லாம் ஆண்டிக் கோலத்தைக் காண்பார்கள்.

Update: 2021-06-11 02:57 GMT

முருகனின் அலங்கார வழிபாடு சிறந்ததா? கற்சிலை வழிபாடு சிறந்ததா?

நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும் வேண்டுகிறோம். அதில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக ஞானிகளெல்லாம் ஆண்டிக் கோலத்தைக் காண்பார்கள்.

செவ்வாய் கிரகத்திற்கு உரிய கடவுள் முருகன் ஆவார். மேலும், வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியது செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் வந்து இங்கு நிற்க முடிந்தது.

இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவைகள்:

திருப்பரங்குன்றம் (மதுரை மாவட்டம்) திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் (தூத்துக்குடி மாவட்டம்) திருவாவினன்குடி (எ) பழனி (திண்டுக்கல் மாவட்டம்) திருவேரகம் (எ) சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்)திருத்தணி அல்லது குன்றுதோறாடல் (திருவள்ளூர் மாவட்டம்)பழமுதிர்சோலை (மதுரை மாவட்டம்)

முருகனை எப்போதெல்லாம் கற்சிலையாக தரிசிக்கலாம்?

தீராத பிரச்சனைகள் தீரவும், தீராத நோய்களெல்லாம் நீங்கவும் அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று. சில பிரச்சனைகளால் தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார்.

மருத்துவர்கள் கைவிட்ட தீராத நோய் கொண்ட நிலைக்கு நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.

மன குழப்பத்தில் இருப்பவர்கள் ஆண்டிக் கோலத்தில் உள்ள முருகனை வழிபடலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.

எப்போது அலங்கார நிலையில் முருகனை வழிபடலாம்?

கல்யாணம் நடக்கும்போதும், வீடு விற்கும்போது, வாங்கும்போதும், வீடு கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு, இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம். நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகனை தரிசனம் செய்யலாம்.

Tags:    

Similar News