என்ன செய்யலாம்? எப்போ செய்யலாம் ?
வாங்க தெரிஞ்சுக்கலாம்...!!
இந்த வாரம் நாட்களின் சிறப்புகள்
01.02.2021 (திங்கட்கிழமை)
சிறப்புகள் :
சீமந்தம் நடத்துவதற்கு நல்ல நாள்.
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உகந்த நாள்.
கால்நடைகள் வாங்குவதற்கு சிறந்த நாள்.
நீர்நிலைகள் தோண்டுவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு :அம்பிகையை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : சுபமுகூர்த்த தினம்
02.02.2021 (செவ்வாய்க்கிழமை)
சிறப்புகள் :
புத்தாடைகள் அணிவதற்கு நல்ல நாள்.
ஆபரணங்களை வாங்குவதற்கு உகந்த நாள்.
விதைகள் விதைக்க சிறந்த நாள்.
வழிபாடு : நாகதேவதையை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
03.02.2021 (புதன்கிழமை)
சிறப்புகள் :
பெயர் சூட்டுவதற்கு ஏற்ற நாள்.
புதிய ஆடைகளை வாங்குவதற்கு நல்ல நாள்.
வேண்டுதல்களை நிறைவேற்ற சிறந்த நாள்.
கல்வி தொடர்பான பணிகளை ஆரம்பிக்க உகந்த நாள்.
வழிபாடு :முருகரை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : தேற்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த தினம்
04.02.2021 (வியாழக்கிழமை)
சிறப்புகள் :
குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்கு நல்ல நாள்.
புதுப்பெண்ணை அழைப்பதற்கு ஏற்ற நாள்.
கடற்பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு உகந்த நாள்.
வழிபாடு : பைரவரை வழிபட பிரச்சனைகள் அகலும்.
விரதாதி விசேஷங்கள் : தேய்பிறை அஷ்டமி, சுபமுகூர்த்த தினம்
05.02.2021 (வெள்ளிக்கிழமை)
சிறப்புகள் :
அறுவடை செய்வதற்கு நல்ல நாள்.
தீட்சை கொடுப்பதற்கு உகந்த நாள்.
தானியங்களை வாங்குவதற்கு ஏற்ற நாள்.
மந்திரம் ஜெபிக்க சிறந்த நாள்.
வழிபாடு : குருமார்களை வழிபட கவலைகள் தீரும்.
06.02.2021 (சனிக்கிழமை)
சிறப்புகள் :
ஆபரணங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.
உபநயனம் செய்வதற்கு சிறந்த நாள்.
மனை பார்க்க ஏற்ற நாள்.
தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க உகந்த நாள்.
வழிபாடு : அனுமனை வழிபட காரியத்தடைகள் விலகும்.
07.02.2021 (ஞாயிற்றுக்கிழமை)
சிறப்புகள் :
நீர்நிலைகளை கட்டுவதற்கு சிறந்த நாள்.
வாகனங்களை மாற்றுவதற்கு நல்ல நாள்.
வேலைக்கு பணியாட்களை சேர்ப்பதற்கு ஏற்ற நாள்.
ஆபரணங்களை அழித்து செய்வதற்கு உகந்த நாள்.
வழிபாடு : பெருமாளை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : சர்வ ஏகாதசி
தொகுப்பு - மைக்கேல்ராஜ்