சென்னையில் முதன் முதலாக சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய நடிகை யார் தெரியுமா?
டி .ஆர் .ராஜகுமாரி ஒரு சரித்திரம்.வாங்க சரித்திரம் பார்ப்போம்.;
தமிழகத்தின் மர்லின் மன்றோ. டி .ஆர் .ராஜகுமாரி பிறந்த நாளின்று..
ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.5.5.1922 வெள்ளிக் கிழமையன்று தஞ்சாவூரில் ராதாகிருஷ்ணப் பிள்ளை-ரங்கநாயகி தம்பதிக்கு பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவரது இயற்பெயர் "ராஜாயி' என்பதாகும்.பள்ளியில் 3ஆம் பாரம் (8ஆம் வகுப்பு) வரை இவர் படித்துள்ளார். . பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
டி.ஆர்.ராஜகுமாரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்வழிப் பாட்டி குசலாம்பாள் கர்நாடக பாடகியாக விளங்கியவர். டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி பிரபல கதாநாயகி நடிகையாவார். எஸ்.பி.எல்.தனலக்ஷ்மியின் மகள்களான ஜோதிலட்சுமியும் ஜெயமாலினியும் கவர்ச்சி நடிகைகள். டி.ஆர்.ராஜகுமாரியின் மற்றொரு சித்தி டி.எஸ்.தமயந்தியும் நடிகை. டி.எஸ்.தமயந்தியின் மகள் குசல குமாரியும் நாயகி நடிகையாவார். டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பி டி.ஆர்.ராமண்ணா சிறந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார்.
தமிழ் நட்சத்திரங்களில் டி.ஆர்.ராஜகுமாரிதான் முதன் முதலாக சினிமா தியேட்டர் கட்டினார். "ராஜகுமாரி' என்று அவர் பெயரிலேயே அமைந்த இந்த தியேட்டரை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். சென்னை, தியாகராயநகர், பாண்டிபஜாரில் "ராஜகுமாரி' தியேட்டர் இருந்த இடம் இன்று வணிக வளாகமாக மாறிவிட்டது.
படப்பிடிப்பின் போது சரியான நேரத்தில் வந்து, தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி. சினிமாவிற்கு வந்த பின்பே நாட்டியம் ஆட கற்றுக் கொண்டார்.
"கனவுக் கன்னி', "ஆடும் மயில்', "பாடும் குயில்', "கோயில் சிற்பம்', "தந்த பொம்மை' என்றெல்லாம் அக்கால சினிமா பத்திரிகைகள் டி.ஆர்.ராஜகுமாரிக்கு கவர்ச்சிப் பட்டங்கள் அளித்தன. அழகான கண்களும் கொஞ்சும் மொழியும் கொண்ட இவர் சேலையணிந்து உடல் முழுவதும் மறைத்து நடித்தாலும், அதையும் மீறிய ஒரு கவர்ச்சி இவரிடம் இருந்தது.
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார்.
ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய "ஜிப்சி" நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய "டிரம்ஸ்" நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்
சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி.
சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
இவர் 1963 இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
வாழ பிறந்தவன் ,கூண்டுக்கிளி ஆகிய இரு படங்களின் தோல்விக்கு பிறகு . மூன்றாவதை நினைக்கவே ராமண்ணாவுக்கு மூச்சுத் திணறியது.
'பேசாமல் தயாரிப்பை மட்டும் கவனித்தவாறு, எல்.வி. பிரசாத் போன்ற திறமை மிக்க இயக்குநர்களைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன... ' என்று தோன்றியது.டி.ஆர். ராஜகுமாரி சம்மதிக்கவில்லை.
'ராமு நீ டைரக்டரா தோல்வி அடையல. சிறந்த தரமான இயக்குநர் என்ற பேரு கிடைச்சிருக்கு. பணம் போனதைப் பத்தி கவலைப்படாதே. உனக்கு விருப்பமான சப்ஜெக்ட் ஜனங்களுக்குப் பிடிக்கல. மக்கள் எதை ரசிக்கிறாங்கன்னு பாரு. அதுக்கேத்தபடி நீயும் மாறு. ஆல் தி பெஸ்ட். ' என்றார்.
கூண்டுக்கிளி வெளியான அதே தினத்தில் தூக்கு தூக்கியும் ரிலீசானது. அதற்கு செம வசூல். தூக்கு தூக்கி போன்ற ஜனரஞ்சகக் கதையான 'குலேபகாவலி'யை உருவாக்கினார் டி.ஆர். ராமண்ணா.
எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ராஜசுலோசனா என்று மூன்று ஹீரோயின்கள் முதன் முதலாக இணைந்து நடித்தனர்.
'விந்தன்' எழுதிய 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ' பாடலின் இனிமை இன்னமும் நள்ளிரவுகளில் 'இன்ப இதிகாசம்' வாசிக்கிறது.
'குலேபகாவலி' யின் ஓய்வற்ற ஓட்டமும் வற்றாத வசூலும் ஆர். ஆர். பிக்சர்ஸை குபேரத்தீவாக்கின.
தொடர்ந்து எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி, ரவிச்சந்திரன் - ஜெயலலிதா நடித்து விழா கொண்டாடிய சித்திரங்களைப் படைத்தது. அந்த வெற்றிகளின் முதுகெலும்பில் இந்தி சினிமாவிலும் தடம் பதித்தது.
ஆரம்பத்தில் எதிர்பார்த்த வெற்றிச் சிறகு வீசிப் பறக்காதது
கூண்டுக்கிளி. மறு வெளியீடுகளில் மிகப் பெரிய வசூல் சுரங்கமாகி விநியோகஸ்தர்களை வியக்க வைத்தது.
'இரு திலகங்களும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளியைத் தயாரித்தவர்' என்கிற அழியாத புகழ் டி.ஆர். ராஜகுமாரிக்குக் கிடைத்தது.
தங்கப்பதுமை படத்தை தூக்கி நிறுத்தியவர்
'ஜூபிடர்' நடிகர் திலகம் நடிக்க தங்கப்பதுமை சினிமாவைத் தயாரித்த சமயம். நாயகி பத்மினிக்கு இணையான முக்கிய வேடத்தில் அவரது சகோதரி லலிதா நடித்து வந்தார்.
லலிதாவுக்குத் திருமணம் ஏற்பாடாகி விட, தங்கப்பதுமையில் நடிப்பைத் தொடர முடியாமல் போயிற்று.
கையைப் பிசைந்தது ஜூபிடர். இடுக்கண் களைய ஓடோடி வந்தார் டி.ஆர். ராஜகுமாரி. லலிதா நடித்த 'மாயாமோகினி' வேடத்தை ஏற்றார்.
காபாலிகர்களின் ராஜநர்த்தகியாக சோழ மண்டலத்தில் குழப்பம் ஏற்படுத்தச் சென்று, மருத்துவர் மணிவண்ணனாக வரும் சிவாஜியின் காதலில் சிக்கி, நாயகனின் உண்மை அன்பில் திருந்தி, அதற்குப் பரிசாக வில்லன் எம்.என். நம்பியாரால் முகம் சிதைக்கப்பட்டு, காதலனுக்காகத் தன் அழகையே தியாகம் செய்யும் அருமையான வேடம்!
'முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்'
பட்டுக் கோட்டையாரின் பவுன் வரிகளில் நடிகர் திலகமும் டி.ஆர். ராஜகுமாரியும் கூடிக் களிக்கும் டூயட். கல்யாணி ராகத்தில் ஒலிக்கும். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் அந்தரங்கத்தின் தங்கரதம் தவழும்!
அத்தனை இன்ப அவஸ்தைகளையும் தன் நீள் விழிகளில் அகன்றத் திரையிட்டுக் காட்டுவார் டி.ஆர். ராஜகுமாரி.
கிருஷ்ண பக்தி, மனோகரா வரிசையில் டி.ஆர். ராஜகுமாரியின் அதி அற்புதமான குணச்சித்திர நடிப்பில் மற்றொரு மகுடம் 1959ன் தைப் பொங்கல் பரிசு தங்கப்பதுமை!
புதுமை பித்தனில் ராமண்ணா அக்காளுக்காக ....
புதுமைப்பித்தன் ஷூட்டிங். சீறும் நாகங்களுக்கு நடுவே டி.ஆர். ராஜகுமாரி நடிக்க வேண்டும்.
'என்னால் இந்த சீன்ல நடிக்க முடியாது ராமு... '
படை எடுத்து வந்து பாதங்களில் ஏறும் பாம்புகளைப் பார்த்து பயந்து அலறினார் டி.ஆர்.ராஜகுமாரி.
'ராஜாயி... நீ இதில் நடிக்க வேண்டாம். நானே உனக்காக டூப் போட்டுக்கறேன்.
நீ கட்டியிருக்கிற சேலையை மட்டும் என் கிட்ட கொடுத்துடு. போ... போயி ஸாரியை மாத்திக்கிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. '
ஹீரோயினை ஆசுவாசப்படுத்தி விட்டு டைரக்டர் ராமண்ணா அக்காவின் புடைவையோடு களம் இறங்கினார். தன் கால்களுக்கும் அரிதாரம் பூசிக்கொண்டார்.
'இடுப்புக்குக் கீழே கால் பக்கத்தை மட்டும் படம் ஆக்குங்க. எனக்கொன்னும் பயம் இல்லை... ' என்று ஒளிப்பதிவாளருக்கு உத்தரவானது.
விஷ ஜந்துகளுடன் அஞ்சியவாறே தோன்றியதில் மறு நாள் டி.ஆர். ராமண்ணாவுக்கு 104 டிகிரி ஜூரம்.
ஜூபிடர்' நடிகர் திலகம் நடிக்க தங்கப்பதுமை சினிமாவைத் தயாரித்த சமயம். நாயகி பத்மினிக்கு இணையான முக்கிய வேடத்தில் அவரது சகோதரி லலிதா நடித்து வந்தார்.
லலிதாவுக்குத் திருமணம் ஏற்பாடாகி விட, தங்கப்பதுமையில் நடிப்பைத் தொடர முடியாமல் போயிற்று.
கையைப் பிசைந்தது ஜூபிடர். இடுக்கண் களைய ஓடோடி வந்தார் டி.ஆர். ராஜகுமாரி. லலிதா நடித்த 'மாயாமோகினி' வேடத்தை ஏற்றார்.
காபாலிகர்களின் ராஜநர்த்தகியாக சோழ மண்டலத்தில் குழப்பம் ஏற்படுத்தச் சென்று, மருத்துவர் மணிவண்ணனாக வரும் சிவாஜியின் காதலில் சிக்கி, நாயகனின் உண்மை அன்பில் திருந்தி, அதற்குப் பரிசாக வில்லன் எம்.என். நம்பியாரால் முகம் சிதைக்கப்பட்டு, காதலனுக்காகத் தன் அழகையே தியாகம் செய்யும் அருமையான வேடம்!
'முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்'
பட்டுக் கோட்டையாரின் பவுன் வரிகளில் நடிகர் திலகமும் டி.ஆர். ராஜகுமாரியும் கூடிக் களிக்கும் டூயட். கல்யாணி ராகத்தில் ஒலிக்கும். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் அந்தரங்கத்தின் தங்கரதம் தவழும்!
அத்தனை இன்ப அவஸ்தைகளையும் தன் நீள் விழிகளில் அகன்றத் திரையிட்டுக் காட்டுவார் டி.ஆர். ராஜகுமாரி.
கிருஷ்ண பக்தி, மனோகரா வரிசையில் டி.ஆர். ராஜகுமாரியின் அதி அற்புதமான குணச்சித்திர நடிப்பில் மற்றொரு மகுடம் 1959ன் தைப் பொங்கல் பரிசு தங்கப்பதுமை!
1962ல் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பாசம் படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாகவும், 1963ல் பெரிய இடத்துப்பெண் படத்தில் அக்காவாகவும் நடித்திருந்தார் டி.ஆர். ராஜகுமாரி.
கவிஞர் கண்ணதாசனின் வானம்பாடியில் 'குட்டி கமலின்' அம்மாவாகக் காட்சி அளிப்பார். காலத்தை வென்ற கிருஷ்ணகானம்
'கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே'.
அப்பாடல் துவங்குவதற்கு முன் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது டி.ஆர். ராஜகுமாரியின் கனிவான குரல்!
வானம்பாடியோடு ஒப்பனைக்கு ஓய்வு கொடுத்தார் டி.ஆர். ராஜகுமாரி!
—————-
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ்த் திரை தேவதை டி.ஆர். ராஜகுமாரி! 1999 முடிவதற்குள்ளாகவே தன் யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டார்.
அந்த மவுன கீதத்தின் மறைவுச் செய்தியில், மண்ணோடு மண்ணாக கலந்து போயின ராஜகுமாரியின் ரகசியக் கனவுகள்.
நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு அவரது காலடியில், கனகாபிஷேகம் செய்யக் காத்திருந்த கனவான்களைத் தன்னைக் காணவும் அனுமதிக்காதவர் ராஜகுமாரி.
'அவரது பெயர் சினிமாவுக்காக ராஜகுமாரி ஆனதே தவிர, கடைசி வரையில் அவர் துறவியாகவே வாழ்ந்தார்… ' என்று குறிப்பிட்டுள்ளார் – அவருடன் நெருக்கமாகப் பழகிய காமெடி நடிகை டி.பி. முத்துலட்சுமி.
'நடனம், பாட்டு, நடிப்புன்னு எல்லாத் திறமையும் இருந்தும், அந்தப் புகழுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ராஜகுமாரி நடந்துகிட்டாங்க.
'சந்திரலேகா' – அக்காவோட எனக்கு முதல் படம். கூண்டுக்கிளி அக்காவோட சொந்தத் தயாரிப்பு. அதுல அவங்க நடிக்கலைன்னாலும், நான் நடிக்கறதுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.
அவங்களோட நடிச்சதுல மனோகரா மிக முக்கியமானது. வசந்தசேனையா அக்கா நடிச்சாங்க. அவங்க தோழியாக நான் வருவேன். ஒரு கட்டத்துல அக்கா மன்னரை ஏமாத்த, தூக்கு போட்டுக்குற மாதிரி நடிக்கணும்.
நான் ஓடிப் போய் அரசர் கிட்ட, 'மகாராஜா… வசந்தசேனையம்மா தூக்கு போட்டுக்கிட்டு சாகப் போறாங்க… தயவு செஞ்சு காப்பாத்துங்கன்னு… ' நீலிக் கண்ணீர் வடிக்கணும். ரிகர்சல் நடந்தது.
டைரக்டர் எல்.வி. பிரசாத் எதிர்பார்த்த அளவு, நான் திருப்தியா நடிக்கலண்ணு அக்கா ஃபீல் பண்ணாங்க.
உடனே எங்கிட்ட வந்து,'முத்து படத்துல இது ரொம்ப முக்கியாமான சீன். நீ பசப்பற மாதிரி பேசணும். அதைப் பார்க்கிற ஜனங்க உன்னையும் என்னையும் நல்லா திட்டணும். அப்பத்தான் நம்ம நடிப்பு ஜனங்க கிட்ட சரியா போய் சேர்ந்ததா அர்த்தம்னு சொன்னார்.
அக்காவே, அந்த டயலாகை எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிச்சும் காட்டினார்.
வில்லி வேஷம்னா எப்படி நடிக்கணும், காமெடி நடிப்பு எவ்விதம் இருக்கணும்னு அக்கா சொல்ல கேட்கணும்.
'முத்து… எல்லாவிதமான நடிப்பும் தெரிஞ்சாத்தான் நடிகைங்கற முழுத் தகுதியை நாம அடைவோம்… ' என்பார்.
டைரக்டர் எங்க ரெண்டு பேரையும் பட்டப் பெயர் வெச்சிக் கூப்பிடுவாரு. அக்காவை 'தாராசிங்' குன்னும், என்னை 'கிங்காங்'ன்னும் கூப்பிடுவார். நானாவது பதிலுக்கு ஏதாவது சொல்வேன். ஆனா… சினிமால வசனம் தவிர வேற எதுக்குமே அக்கா வாயே திறக்க மாட்டாங்க.
எப்பவும் ஆழ் கடல் அமைதியா சிரிச்ச முகத்தோட இருப்பாங்க. அக்காவுக்கு தெய்வ பக்தி அதிகம்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகள்ள பீச்சுக்குப் போய் கருட தரிசனம் பார்க்காம வீடு திரும்ப மாட்டாங்க.
அவங்க கழுத்துல நகைங்கறது சும்மா பேருக்குத்தான் கிடக்கும். நினைச்சா தினம் புதுசு புதுசா நாலு பட்டுச் சேலை கட்டலாம். ஆனா சிம்பிளா ஒரே ஒரு ப்ளைன் ஸாரிதான் கட்டிட்டு வருவாங்க. '
ஏங்க்கா இவ்ளோ சிம்பிளா இருக்கிங்கன்னு… கேட்டால், என்னத்துக்கம்மா சுமை என்பார் சிரித்துக் கொண்டே.
அவங்க தம்பி சக்கரவர்த்தி இறந்தப்ப ராஜகுமாரி அக்காவ கடைசியா பார்த்தேன். ரொம்பவே உடைஞ்சு போயிட்டாங்க.
ரத்த பந்தங்களோட சந்தோஷத்துக்காக பாடுபட்டாங்களே தவிர, கடைசி வரையில் தனக்காக ஒரு வாழ்க்கையை ராஜகுமாரி அக்கா நினைச்சிப் பார்க்கவே இல்ல.
கதைகள்ள… நாடகங்கள்ள… குடும்பத்துக்காக தியாகம் செய்யற அக்காவைப் பார்த்திருக்கோம்.
நிஜத்தில் ஒரு சினிமா கதாநாயகி தன்னையே அர்ப்பணிச்சிக்கிட்டு மெழுகுவர்த்தியா வாழ்ந்தாங்க! '
– டி.பி. முத்துலட்சுமி.
1963ல் தொடங்கி டி.ஆர். ராஜகுமாரி வாழ்ந்த அந்தரங்க வாழ்வின் அந்திம காலம் எவரும் அறியாதது.
1981 நவம்பர். முதல்வர் எம்.ஜி.ஆரின் தலைமையில் தமிழ் சினிமா பொன்விழா கொண்டாடியது. அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி சிறப்பு விருந்தினர்.
நீண்ட காலம் பணியாற்றியப் புகழ் பெற்ற மூத்த கலைஞர்களுக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
சென்னையில் வாழ்ந்த டி.ஆர். ராஜகுமாரி ஏனோ அவ்வரிய நிகழ்வில் பங்கேற்காமல் போனார். அவரது மேன்மையை மனத்தில் இருத்தி மத்திய, மாநில அரசுகள் விருது எதுவும் அளிக்கவில்லை.
வெள்ளித்திரையில் அவரைப் பற்றிய நேர்காணல்களோ, கட்டுரைகளோ அன்றையப் பத்திரிகைகளில் வரக் காணோம்.
'ராஜகுமாரி தனிமையில் வாடியது ஏன்…? ' என்பதற்குப் பழம்பெரும் நடிகை ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
'டி.ஆர். ராஜகுமாரியின் ஏகாந்த நிலை… அவரது குடும்பத்துக்காக மட்டும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் பி.யூ. சின்னப்பா!
அவருடன் நடித்த போதெல்லாம் புது உற்சாகத்துடன் ராஜகுமாரியைப் பார்க்க முடிந்தது. செட்டில் எல்லாரையும் போல் இயல்பாகவே இருந்தார். திடீரென பி.யூ. சின்னப்பா இறந்து போனார்.
அந்த இழப்பு மற்றவர்களைக் காட்டிலும் ராஜகுமாரியை அதிகம் பாதித்தது. ராஜகுமாரியின் மகிழ்ச்சியும் சின்னப்பாவின் மறைவோடு காணாமலே போய் விட்டது.
சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னரே ராஜகுமாரி தன்னை ஒரேயடியாகத் தனிமைப்படுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட மனம் பேதலித்த நிலை. '
ஒரு நாளிதழில் வெளி வந்த மேலே சொல்லப்பட்டத் தகவலை, ஊர்ஜிதப்படுத்த எந்த ஆதாரமும் கிடையாது.
1950 தைத் திருநாளில் சென்னை பாண்டிபஜாரில் டி.ஆர். ராஜகுமாரிக்கு உரிமையான திரையரங்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
ஆரம்பத்தில் அதற்கு 'ஸ்வதந்திரா' என்று பெயரிட ஆலோசித்தார்கள். பின்பு அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்க 'ராஜகுமாரி டாக்கீஸ்' என்றானது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தென் சென்னையின் முதல் தரமான ஏ.ஸி. தியேட்டராக ராஜகுமாரி திரையரங்கம் அமைந்தது. தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் அடிக்கடி சென்று பல்வேறு ஆங்கில சினிமாக்களை அங்கு கண்டு களித்திருக்கிறார்கள்!
—————
1960ல் பிரபல வார இதழ் ஒன்றில் டி.ஆர். ராஜகுமாரி தனது திரையுலக அனுபவங்களைக் கூறி இருக்கிறார்.
அதற்குப் பின்பு டி.ஆர். ராஜகுமாரியின் பேட்டி ஏதேனும் வெளியானதா என்பது ஆய்வுக்குரிய வினா!
'திரைப்பட உலகில் உழைப்பும், உண்மையும், உயர்ந்த எண்ணமும் நிறைந்த காலம் அது. உழைத்தால் தான் உயர முடியும். திறன் இருந்தால் மாத்திரமே திரையுலகில் பிரகாசிக்க இயலும். எண்ணம் சிறந்திருந்தாலே எடுத்த காரியம் எதிலும் வெற்றி காண முடியும் என்றிருந்த பொற்காலம் அது.
1940 என்று நினைக்கிறேன். திருமதி எஸ். டி. சுப்புலட்சுமி அவர்களின் புகழே எங்கும். டைரக்டர் கே. சுப்ரமணியத்துடன் அவர்கள் திறந்த காரில் மெரீனா கடற்கரையில் செல்வார்கள்.
அக்காட்சியைக் காண ஏராளமான மக்கள் தினந்தோறும் காத்து நிற்பார்கள். அக்கூட்டத்தில் நானும் என் தம்பியும் கூடக் கண்டிப்பாக இருப்போம். எஸ். டி.சுப்புலட்சுமியைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி!
சாதாரணமானவரா அவர்! பெரிய நட்சத்திரம் அல்லவா! தியாக பூமியின் கதாநாயகி அல்லவா!
நானும் ஓரளவு நடித்துப் புகழ் பெறுவேன் என்று அப்போது நினைக்கவே இல்லை.
கச்ச தேவயானி எனக்குப் புகழ் பெற்றுத் தந்தது. எனக்குக் கிடைத்த நற்பெயருக்குக் காரணமானவர் டைரக்டர் கே. சுப்ரமணியம்.
அப்போதெல்லாம் படப்பிடிப்புக்குப் போய் வருவதென்பது கிட்டத்தட்டப் பள்ளிக்கூடம் செல்வது போலிருக்கும். காலையில் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் மாலையில் வீடு திரும்புவேன்.
எல்லா கம்பெனிகளிலும் ஒரே குடும்பத்தினர் மாதிரி பழகுவோம். டைரக்டர், நடிகை, வசனகர்த்தா, காமிராகாரர், லைட்பாய் என்ற முறையில் பாகுபாடே கிடையாது.
எல்லாரும் ஒன்றே. சாப்பாட்டின் போது டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் பக்கத்தில் லைட் பாயும் உட்கார்ந்து சாப்பிடுவார். அந்த அளவுக்குச் சமத்துவம் வழங்கப்பட்டிருந்த பொற்காலம் அது.
அப்படியோரு பொற்காலத்தை எனக்கு வழங்கியதற்காக கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் எனக்குச் சொந்தமாக ஒரு மனை கிடையாது. கன்னியாகுமரிக்கு ஒரு முறை சென்றேன். அங்கே குமரி அம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன்.
சொந்த வீடு கட்டினால் பகவதி அம்மனின் பெயரையே என்னுடைய, புது இல்லத்துக்குச் சூட்ட வேண்டும் என்று தோன்ற, அவ்வாறே வேண்டிக் கொண்டு திரும்பினேன்.
அடுத்த ஆண்டே ஆசைக் கனவு பலித்தது. சக்தி மிக்க பகவதியின் பெயரைத் தாங்கி 'கன்யாகுமரி பவன்' என்று என் விலாசம் மாறியது.
எம்.கே. தியாகராஜ பாகவதருடன் நான் நடித்த சிவகவியும், ஹரிதாஸும் என் நினைவிலிருந்தும் சரி, ரசிகர்களின் நினைவிலிருந்தும் சரி… என்றென்றும் நீங்க முடியாதவை.
மனோன்மணி, குபேரகுசலா, விகடயோகி, பங்கஜவல்லி, கிருஷ்ணபக்தி, வனசுந்தரி என்று ஆறு படங்களில் பி.யூ. சின்னப்பாவுடன் தொடர்ந்து நடித்திருக்கிறேன்.
'பி.யூ. சின்னப்பா அவர்கள் ஒரு பிறவி நடிகர்! வசனம் சொல்வதிலும், நடிப்பிலும், பாட்டிலும், கத்திச் சண்டையிலும், சிலம்பாட்டத்திலும் அவர் ஈடு இணையற்று விளங்கினார்.
சிவாஜி கணேசனுடன் நான் நடித்தவை அன்பு, மனோகரா, தங்கப்பதுமை ஆகியன. அன்பு படத்தில் நடிக்கும் போதே, வருங்காலத்தில் சிவாஜி கணேசனை விடச் சிறந்த நடிகர் இன்னொருவர் இருக்கப் போவது கிடையாது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். ' டி.ஆர். ராஜகு
திரைப்படமும் ,சிறப்பு இயல்பும்
தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி ஆகியோருடன் கலைத் தொடர்பு கொண்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. பாசம், பெரிய இடத்துப் பெண், குலேபகாவலி, பணக்காரி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த சந்திரலேகா படத்தில் வி.என்.ஜானகி ஒரு நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார். மு.கருணாநிதி வசனம் எழுதிய மனோகரா, புதுமைப் பித்தன் ஆகிய படங்களில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
"மனோகரா' படத்தில் சிவாஜியின் நடிப்பு போற்றப் படுவதற்கு, டி.ஆர்.ராஜகுமாரியின் பாத்திரமும் நடிப்பும் ஒரு காரணமாகும். குளிர்ந்த நீராக இருந்த மனோகரனை (சிவாஜியை), கொதிக்கும் நீராக மாற்றியது வசந்தசேனை (டி.ஆர்.ராஜகுமாரி) தானே. "மனோகரா' படத்தில் சிவாஜிக்கு, வில்லி சித்தியாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, "அன்பு' படத்தில் நல்ல சித்தியாக நடித்துள்ளார்.
பி.பானுமதி தன்னைவிட வயதில் குறைந்த சிவாஜியுடன் நடித்ததைப் போலவும், செüகார் ஜானகி தன்னைவிட வயதில் குறைந்த ஏ.வி.எம்.ராஜனுடன் நடித்ததைப் போலவும், தன்னைவிட வயதில் குறைந்த டி.ஆர்.மகாலிங்கத்துடன் ஜோடியாக "இதய கீதம்' படத்தில் நடித்துள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. இப்படத்தின் நாயகி, நாயகனுக்கு அக்காள் போல் உள்ளார் என்று, இப்பட வெளியீட்டின்போது விமர்சனம் எழுந்தது.
"மதனமாலா' (1947) என்ற படத்தின் நாயகி டி.ஆர்.ரஜினி என்பவர் பவளக்கொடி படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் நாயகி நடிகையான டி.பி.ராஜலக்ஷ்மி என்பவர் இதய கீதம் படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்கள் ஏற்று நடித்த ஒரே படம் "விஜயகுமாரி' என்ற படம். ராஜகுமாரி என்ற பெயரில் இளவரசியாகவும், தூயமணி என்ற பெயரில் தீவுவாசிப் பெண்ணாகவும் இரு வேடங்கள் ஏற்று இப்படத்தில் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. இந்த "விஜயகுமாரி' படத்தின் எடிட்டர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராஜகுமாரி சொந்தக்குரலில் பாடி நடிக்கக் கூடியவராக இருந்தாலும், சில படங்களில் இவருக்கு வேறு பாடகிகள் பின்னணி பாடியுள்ளது ஒரு அபூர்வ நிகழ்ச்சியாக உள்ளது. "புதுமைப் பித்தன்' படத்தில் வரும் "மனமோகனா மறந்து போவேனா' என்ற பாடலை டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா பாடியுள்ளார். "தங்கமலை ரகசியம்' படத்தில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக மூன்று பாடல்களை ஜிக்கி பாடியுள்ளார். "குலேபகாவலி' படத்தில் வரும் "வில்லேந்தும் வீரரெல்லாம்' என்ற பாடலில் டி.ஆர்.ராஜகுமாரிக்காக பி.லீலா குரல் கொடுத்துள்ளார்.
இவர் நடித்த 25 படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்கள் பாடியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார்.
லலிதா - பத்மினி சகோதரிகள் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த பவளக்கொடி, விஜயகுமாரி, இதய கீதம், அமர கீதம் ஆகிய 4 படங்களில் நாட்டியமாடியுள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "அன்பு' படத்தில் லலிதாவும் பத்மினியும் நடித்துள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "விஜயகுமாரி' படத்தில் வைஜெயந்திமாலா நாட்டியமாடியுள்ளார்.
"மதனமாலா' (1947) என்ற படத்தின் நாயகி டி.ஆர்.ரஜினி என்பவர் பவளக்கொடி படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முதல் நாயகி நடிகையான டி.பி.ராஜலக்ஷ்மி என்பவர் இதய கீதம் படத்தில் டி.ஆர். ராஜகுமாரிக்கு தாயாக நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி இரு வேடங்கள் ஏற்று நடித்த ஒரே படம் "விஜயகுமாரி' என்ற படம். ராஜகுமாரி என்ற பெயரில் இளவரசியாகவும், தூயமணி என்ற பெயரில் தீவுவாசிப் பெண்ணாகவும் இரு வேடங்கள் ஏற்று இப்படத்தில் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி. இந்த "விஜயகுமாரி' படத்தின் எடிட்டர் எம்.ஏ.திருமுகம்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் சமூகப் படம் "விகடயோகி'.
இவர் பிறமொழிப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,"சந்திரலேகா' இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் பட்டது. 1948இல் உருவான சந்திரலேகா 1949இல் செக்கோஸ்லேவேக்கியாவில் சிறந்த படத்திற்கான விருது பெற்றது.
தமிழ்த் திரைப் படங்களிலேயே 110 வாரங்கள் திரையிடப்பட்ட ஒரே படம், டி.ஆர்.ராஜகுமாரியும் தியாகராஜ பாகவதரும் இணைந்து நடித்த "ஹரிதாஸ் படம் மட்டுமே. ஓடிய தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் "ஹரிதாஸ்' மட்டுமே.
டி.ஆர்.ராஜகுமாரி "கச்ச தேவயானி' படத்தில் குளத்தில் குளித்துவிட்டு உடலில் ஈரப்புடவையுடனும், இடுப்பில் குடத்துடனும் வரும் காட்சியும், "சந்திரலேகா' படத்தில் ரஞ்சனின் தழுவலில் இருந்து ராஜகுமாரி மயங்கியவர் போல் நடித்து நழுவும் காட்சியும், அன்றைய பத்திரிக்கைகளில் பரபரப்பான விமர்சனங்களாயின. "கச்ச தேவயானி' படத்தை 30 முறை பார்த்தேன் 40 முறை பார்த்தேன் என்று அக்காலத்தில் ரசிகர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். "கச்ச தேவயானி' படத்தில் தேவகுருவின் மகன் கச்சனும் அசுரகுருவின் மகள் தேவயானியும் காதல் புரிந்து புராண காலத்திலேயே கலப்பு மணம் செய்துள்ளனர்.
"பிரபாவதி' படத்தில் நாயகன் ஹொன்னப்ப பாகவதருடன், டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி நாயகியாக நடித்து ஒரு டூயட் பாடியிருந்தாலும், டி.ஆர்.ராஜகுமாரியும் துணை நாயகியாக நடித்து நாயகனுடன் ஒரு டூயட் பாடியுள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி தனது தம்பி டி.ஆர்.ராமண்ணாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வாழப்பிறந்தவள், குலேபகாவலி, புதுமைப் பித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வி.நாகையா திரைக்கதை எழுதி நடித்து இயக்கிய "என்வீடு' படத்தின் நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார். மேலும் டி.ஆர்.ராஜகுமாரி நாயகியாக நடித்த "பணக்காரி' படத்திலும் வி.நாகையாதான் நாயகன்.
"தங்கமலை ரகசியம்' படத்தில் பி.எஸ்.வீரப்பாவுக்கு மனைவியாகவும், நாயகி ஜமுனாவுக்கு சித்தியாகவும் நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.
இவர் நடித்த 25 படங்களில் மொத்தம் 94 பாடல்கள் பாடியுள்ளார். இதில் இவர் தனித்து 54 பாடல்கள் பாடியுள்ளார். மற்றவர்களுடன் இணைந்து 40 பாடல்களை பாடியுள்ளார்.
லலிதா - பத்மினி சகோதரிகள் டி.ஆர்.ராஜகுமாரி நடித்த பவளக்கொடி, விஜயகுமாரி, இதய கீதம், அமர கீதம் ஆகிய 4 படங்களில் நாட்டியமாடியுள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "அன்பு' படத்தில் லலிதாவும் பத்மினியும் நடித்துள்ளார்கள். டி.ஆர்.ராஜகுமாரி நடித்த "விஜயகுமாரி' படத்தில் வைஜெயந்திமாலா நாட்டியமாடியுள்ளார்.
கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த "வானம்பாடி'(1962) படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்துள்ளார்.
டி.ஆர்.ராஜகுமாரி நடித்தது மொத்தம் 32 படங்கள். இதில், 21 படங்களில் நாயகியாகவும், 11 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
r
1959 இல் தமிழக அரசு இவருக்கு "கலைமாமணி விருது' அளித்தது.
ராஜகுமாரியாக நடித்து, ராககுமாரியாக பாடி ரசிகர்களை மகிழ்வித்து, தம் குடும்பத்தாருக்காக திருமணம் செய்யாமலேயே தியாககுமாரியாக வாழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி தமது வீட்டிற்கு "கன்யாகுமரி பவனம்' என்று பெயர் வைத்திருந்தார். எண்: 77, அபிபுல்லா ரோடு, மதறாஸ்- 17 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜகுமாரி, தனது 77 ஆவது வயதில் 20.09.1999 இல் மறைந்தார்.