இன்ஸ்டாநியூஸ் சண்டே சமையல்
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்னிக்கு வாங்க சிக்கன் நூடுல்ஸ் செய்யலாம்
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 100 கிராம்
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
வெங்காயம்- தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாகழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாயை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அதில் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.
அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.
அப்புறம் என்ன இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்க.