உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் அளிக்க, தனியாக, 'இ - மெயில்' முகவரி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அனுமதிமேலும், பள்ளிகளின் சார்பில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்த, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பள்ளிகள், உயர் நீதிமன்றம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அனுமதியை மீறி, அதிக கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்துவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, வரம்பு மீறும் பள்ளிகள் குறித்து புகார் தருவதற்கு, தனியாக, 'இ - மெயில்' முகவரிகளை, பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சாமி சத்தியமூர்த்தி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சென்னை உயர் நீதிமன்றத்தின், ஜூலை, 17ல் பிறப்பித்த உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள், 40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் கேட்டு, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது. இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரின் கடிதத்தில், ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும், ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 40 சதவீதத்துக்கு மேல், கட்டணம் செலுத்துமாறு, பெற்றோரை வற்புறுத்தும் பள்ளிகள் மீது, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.ஆதாரம்இதற்காக, ceokanchee puram@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் புகார்களை, இ - மெயிலிலோ அல்லது காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலக முகவரிக்கோ, உரிய ஆதாரங்களுடன் அனுப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
#tamilnadu #instanews #kanchipuram #complaint #private #email #mailaddress #school #privateschools #fees #pending