மதுரை மேற்கு ஒன்றியம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பட்டி கிராமத்தில் ௩௦௦ கிலோ வாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்:
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னப்பட்டி கிராமத்தில் 300 கிலோ வாட் திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மரை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய துணைத் தலைவர் கார்த்திக் ராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தாசில்தார் முத்துவிஜயகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதன் மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி கூறினர். தொடர்ந்து, இதேபோன்று அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்குலம் கிராமத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.