கேரளாவில் இன் –கார் டைனிங் வசதி தொடக்கம்

வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, ‘இன் –கார் டைனிங்’ எனும் வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது

Update: 2021-06-21 04:04 GMT

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, 'இன் –கார் டைனிங்' எனும் வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை கே.டி.டி.சியின் அஹார் உணவகங்களில் செய்தவுடன், நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு உணவக பணியாளர்கள் மூலமாக உணவு வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலமாக மெனுவில் உள்ள சிற்றுண்டிகள், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு அனைத்தையும் ஆர்டர் செய்யமுடியும்.

Tags:    

Similar News