இந்திய செயற்கை கோள் மனிதர் உடுப்பி ராமச்சந்திர ராவ் காலமான தினம் இன்று

1975 ம் ஆண்டு நம் நாடு ஏவிய முதல் செயற்கை கோளான, 'ஆரியப்பட்டா'வின் வெற்றியில் பெரும் பங்காற்றிய இந்திய செயற்கை கோள் மனிதர்' உடுப்பி ராமச்சந்திர ராவ் நினைவு தினம்

Update: 2021-07-24 04:41 GMT

இந்திய செயற்கை கோள் மனிதர்' உடுப்பி ராமச்சந்திர ராவ் காலமான தினம் இன்று!

உடுப்பி ராமச்சந்திர ராவ். நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பனாரஸ் ஹிந்து பல்கலை, குஜராத் பல்கலை ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றார்.'

'காஸ்மிக்' கதிர் ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியை தொடங்கினார். பின், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'வில் பணியாற்றினார்.

1966-ல் நாடு திரும்பியவர், அகமதாபாதில் வானியல் தொடர்பான படிப்பை துவக்கி வைத்தார். செயற்கை கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்றார்.

1975-ல் நம் நாடு ஏவிய முதல் செயற்கை கோளான, 'ஆரியப்பட்டா'வின் வெற்றியில் பெரும் பங்காற்றினார். 1984 முதல் 19-94 வரை 'இஸ்ரோ' தலைவராக பணியாற்றினார்.

'பத்மபூஷன், பத்மவிபூஷன்' உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 2017 இதே ஜூலை- 24ம் தேதி தன் 85வது வயதில் இயற்கை எய்தினார்.'


Tags:    

Similar News