பல்வேறு வகையான கூந்தலை பராமரிப்பது எப்படி?
Hair care tips at home-எந்தெந்த வகையான கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்த சில டிப்ஸ் இங்கு காணலாம்.;
Hair care tips for curly hair in tamil-கேச பராமரிப்பு பைல் படம்.
Hair care tips at homeகூந்தல் பராமரிப்பு விஷயங்களை ஒவ்வொரு வகை கூந்தலுக்கும் தனித் தனியாக செய்ய வேண்டும். சிலருக்கு நேரான கூந்தல் இருக்கும், சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். இப்படி ஒவ்வொரு கூந்தலுக்கும் தகுந்த மாதிரி பராமரிப்பு விஷயங்களை நாம் கையாள வேண்டும். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் நம் தலைமுடியை பராமரிப்பதற்கு என்று சில விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. நல்ல கூந்தல் பராமரிப்பு என்பது உங்கள் தலை முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், தொற்றுநோய்கள் போன்ற பிரச்சினைகள் இல்லாமலும் காக்க உதவுகிறது.
மேலும் முடி பராமரிப்பை தொடங்குவதற்கு முன்பு உங்கள் கூந்தலின் வகை, தன்மை மற்றும் முடி பராமரிப்பு பிரச்சினைகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முடி பராமரிப்பு விஷயங்கள் இயற்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் கெமிக்கல்கள் நிறைந்த பொருட்கள் உங்கள் முடிக்கு பிரச்சினைகளை உண்டு செய்யலாம்.
Hair care tips for curly hair in tamilவாரத்திற்கு ஒரு முறையாவது தலைமுடியை ஆழமாக கண்டிஷனிங் செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரேற்றம் மூலம் முடி உதிர்வதை தடுக்கலாம். ஷாம்பு மற்றும் கண்டிஷனருடன் உங்கள் கூந்தலை அலசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இது உங்கள் முடிகள் அதிகமாக வறண்டு போவதை தடுக்கிறது. முடிக்கு எண்ணெய் கண்டும் மசாஜ் செய்து வரலாம்.
முடி வகைக்கு ஏற்ற முடி பராமரிப்பு முறைகள் நேரான கூந்தல்: நேரான முடியை நிர்வகிப்பது என்பது மிகவும் எளிதான காரியம் ஆகும். நேரான முடியை மிக எளிதாக பராமரிக்க முடியும்.
நேரான முடியை கழுவும் முறை :
உச்சந்தலையில் படிந்திருக்கும் அதிகப்படியான க்ரீஸ் மற்றும் அழுக்குகளை அகற்ற சல்பேட் ஷாம்பு உதவுகிறது. நீங்கள் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்பைக் கூட பயன்படுத்தி வரலாம். உங்கள் தலைமுடியில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருந்தால் 2-3 நாட்களுக்கு ஒரு முறை கூட தலைமுடியை கழுவி வரலாம். நேரான கூந்தலுக்கு லேசான கண்டிஷனருடன் லேசான ஷாம்புவை பயன்படுத்தி வரலாம். கூந்தலை ஈரமான நிலையில் உலர்த்துவதை தவிருங்கள். ஏனெனில் இது முடி எளிதில் உடைய வழி வகுக்கிறது.
நேரான கூந்தல் முனைகள் பிளவுபட வாய்ப்பு உள்ளது. எனவே 3-5 மாதங்களுக்கு ஒருமுறை பிளவுபட்ட நுனிகளை வெட்டுவது அவசியம். நேரடியாக சூரிய ஒளி தலையில் படுவது உங்களுக்கு வறட்சியை ஏற்படுத்தலாம். நேரான முடிக்கு ஹேர் சீரமையை பயன்படுத்தி வரலாம். இது உங்கள் முடி உலராமல் தடுக்க உதவுகிறது.
கூந்தலை கழுவும் முறை :
அலை அலையாக இருக்கும் கூந்தலை அடிக்கடி கழுவ வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 3-4 நாட்களுக்கு ஒரு முறை அலை அலையான முடியை கழுவினால் போதும். இதற்கு சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்த வேண்டியது அவசியம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க தலைமுடியை கழுவுவதற்கு முன்பு எண்ணெய் மசாஜ் மூலம் ஊட்டமளிக்க வேண்டும். தலைமுடியை கழுவுவதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வரலாம். அலை அலையான கூந்தல் நுனிகள் நேரான கூந்தலை விட வறண்டதாக இருக்கும்.
எனவே தலைமுடி மற்றும் கூந்தலின் நுனிகளை எப்போதும் நீரேற்றமாகவும் ஊட்டச்சத்துடனும் வைத்திருக்க வேண்டும். அதே மாதிரி அலை அலையான கூந்தலை பராமரிக்க தூங்குவதற்கு முன்பு தலைமுடியை ஒரு கொண்டை மாதிரி போட்டுக் கொள்வது நல்லது. சுருட்டை முடியை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்கென பிரத்யேகமான ஷாம்புவைக் கொண்டு அலச வேண்டும்.
எப்படி கழுவ வேண்டும் :
முதலில் உங்கள் கூந்தலை அலச சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை என ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை சுத்தப்படுத்தி வரலாம். ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு முறை கண்டிஷனரை பயன்படுத்துவது உங்கள் கூந்தலை மென்மையாக்கும். சுருள் முடிக்கான பிரத்யேகமான க்ரீம்களை பயன்படுத்தி வரலாம்.
சிலருக்கு கூந்தல் மிகவும் சுருட்டையாக இருக்கும். அவர்கள் என்ன செய்தாலும் கூந்தலை பராமரிப்பது என்பது இவர்களுக்கு கடினமான ஒன்று தான். மேலும் இந்த வகை முடி வறண்ட தன்மையை ஏற்படுத்தும்.
எப்படி அலச வேண்டும் :
இறுக்கமான சுருட்டை முடி வறண்டு போவதை தடுக்க லேசான சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி வரலாம். உங்கள் தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற இது உதவுகிறது. வேர்க்கால்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். வாரத்திற்கு 2-3 நாட்களுக்கு கண்டிஷனருடன் இதை பயன்படுத்தி வரலாம்.