உங்களுக்கு பிடித்த பழமும் உங்கள் குணங்களும்

உங்களுக்குப் பிடித்தமான கனியை வைத்து உங்கள் குணத்தைக் கணித்து சொல்லிவிடலாம்.

Update: 2021-06-28 13:19 GMT

உங்களுக்கு பிடித்த பழமும் உங்கள் குணங்களும்!

மாம்பழம், வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம், ஆப்பிள்பழம், அன்னாசி, பேரிக்காய், திராட்சை, செர்ரிப்பழம், சீதாப்பழம் ஆகிய பழங்களில் இருந்து உங்களுக்குப் பிடித்த பழங்களை தேர்ந்தெடுத்து அந்தப் பழத்திற்குரிய உங்கள் பலன்களை தெரிந்து கொள்வோம்.

மாம்பழம் : உங்களுக்குப் பிடித்த பழம் மாம்பழம் என்றால், நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர். உங்களுக்கென்று நிலையான எண்ணங்களைக் கொண்டிருப்பீர்கள். சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க மாட்டீர்கள். எந்த சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். வீட்டில் இருப்பவர்களிடம் அன்பாகவும், உங்கள் திறமையை வெளியிலும் காட்டும் தன்மை கொண்டவர்கள்.

வாழைப்பழம் : உங்களுக்குப் பிடித்தப் பழம் வாழைப்பழம் என்றால், நீங்கள் கூச்சம் சுபாவம் கொண்டவராக இருப்பீர்கள். அதனால் பிறருடன் சகஜமாகப் பழக மாட்டீர்கள். நீங்கள் அன்பான, மென்மையான குணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் நல்ல குணங்களை சிலர் அவர்களுடைய சொந்த லாபத்திற்குப் பயன்படுத்தி கொள்வார்கள். அதனால் கவனம் தேவை.

ஆரஞ்சுப்பழம் : உங்களுக்குப் பிடித்தப் பழம் ஆரஞ்சுப் பழம் என்றால், நீங்கள் பொறுமை, மன உறுதி கொண்டவர்கள். கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவீர்கள். நீங்கள் கூச்சம் சுபாவம் கொண்டவர். நண்பர்களிடத்தில் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்.

ஆப்பிள் பழம் : உங்களுக்குப் பிடித்தப் பழம் ஆப்பிள் பழம் என்றால், நீங்கள் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணத்தைக் கொண்டிருப்பீர்கள். அதிகமாகச் செலவு செய்வீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள். சிறந்த தலைவராக பணியாற்றும் ஆற்றல் கொண்டிருப்பீர்கள்.

அன்னாசி : உங்களுக்குப் பிடித்தப் பழம் அன்னாசி என்றால், நீங்கள் நேர்மையானவர். அதேப்போல் எந்த ஒரு விஷயத்தையும் உடனே புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எந்த வேலையையும் தன்னிச்சையாக திறமையுடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உங்களுக்கு அன்பை வெளிப்படுத்த தெரியாது. நீங்கள் எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்.

பேரிக்காய் : உங்களுக்குப் பிடித்தப் பழம் பேரிக்காய் என்றால், நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் அதிக ஆற்றலும், மனவலிமையும் உடையவர். யாருடனும் எளிதில் பழகும் குணம் கொண்டிருப்பீர்கள். ஆனாலும் உங்களுக்கு நண்பர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.

திராட்சை : உங்களுக்குப் பிடித்தப் பழம் திராட்சை என்றால், நீங்கள் அமைதியானவர். அழகினை ஆராதிப்பீர்கள். நீங்கள் பிறருடன் எளிதில் பழகும் குணம் கொண்டிருப்பீர்கள். அதனால் உங்களுடன் நட்பு வைத்துக் கொள்ள பலரும் விரும்புவர். நீங்கள் எந்த செயல் செய்தாலும் ரசித்துச் செய்வீர்கள். வாழ்க்கை எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள்.

செர்ரிப்பழம்: உங்களுக்குப் பிடித்தப் பழம் செர்ரிப்பழம் என்றால், உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். உங்களைச் சுற்றி உங்கள் குடும்பமும், நெருங்கிய உறவுகளும் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்தே இருக்கும்.

சீதாப்பழம் : உங்களுக்குப் பிடித்தப் பழம் சீதாப்பழம் என்றால் நீங்கள் அடக்கமானவர். பொறுமையானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். எந்த ஒரு காரியத்தை செய்யும்போது அவசரமோ, பதட்டமோ படாமல் நிதானமாகச் செய்வீர்கள். உங்களுக்கு வரும் மனைவி அறிவுத்திறன் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

Tags:    

Similar News