அகவிலைப்படி உயர்வு – சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு - ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.

Update: 2021-06-21 01:56 GMT

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலைப்படி (DA) உயர்வு வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, ​​DA அடிப்படை ஊதியத்தில் 17% செலுத்தப்படுகிறது. ஜூலை 2021 முதல் மீண்டும் DA வழங்கப்பட்ட பின்னர் 11% அதிகரித்து 28% ஆக உயர்த்தப்படும். 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் 2021 ஜூலை 1 முதல் 7வது ஊதியக்குழுவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட படி சலுகைகளைப் பெறத் தொடங்குவர் என கூறப்படுகிறது.

அடுத்த மாதம் முதல் நிறுத்தப்பட்ட டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை வழங்குவதை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், பல ஊழியர்கள் தங்களது 7வது ஊதிய கமிஷன் படி அடுத்த மாதத்திலிருந்து எவ்வளவு சம்பளம் பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் குழப்பத்தில் உள்ளனர். 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏ வில் 3 சதவீதம் உயர்வு, ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை 4 சதவீதம் உயர்வு, ஜனவரி முதல் ஜூன் 2021 வரை 4 சதவீதம் அதிகரிப்பு உள்ளிட்ட மூன்று நிலுவையில் உள்ள டிஏ உயர்வுகளைச் சேர்த்த பிறகு 11% உயர்வு வந்துள்ளது.

7 வது ஊதியக்குழுவில் மேட்ரிக்ஸின் படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000. தற்போதுள்ள ஊதிய மேட்ரிக்ஸில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாதத்திற்கு ரூ.2,700 நேரடியாக சேர்க்கப்படும். இந்த உயர்வு மூலம், ஊழியர்களின் மொத்த DA ஆண்டு அடிப்படையில் ரூ.32,400 அதிகரிக்கும்.

Tags:    

Similar News