ஆக்ஸிஜன் வசதியுடன் 2 கொரோனா சிகிச்சை மையம் 48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்டது

பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை

Update: 2021-05-10 13:42 GMT

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2 கொரோனா சிகிச்சை மையம்: 48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தினசரி பாதிக்கப்படுவோரால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கும் வகையில் 48 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இரண்டு கொரோனா கிசிச்சை மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள பார்மர் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்குள் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய இரண்டு கொரோனா சிகிச்சை மையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இரண்டு கொரோனா சிகிச்சை மையங்களுள் ஒன்று பச்பத்ரா பகுதியில் பாலைவனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 கூடாரங்களில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆக்ஸிஜன் படுக்கைகள் ஆகும். இந்த மையத்தில் கொரோனா சிகிச்சைக்கும் தேவையான அனைத்து நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதே போல மற்றொரு மையம் பையது என்ற பகுதியில் 48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மொத்தம் 100 படுக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 30 ஆகிஸிஜன் படுக்கைகளாகும். சுற்றுப்புற பகுதி மக்களுக்கும் ஊரக பகுதி மக்களுக்கும் இந்த இரண்டு மையங்களும் பேருதவியாக அமையும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பார்மர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. தற்போது வரை பார்மரில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 4700 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து பார்மர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மேவா ராம் ஜெயின் கூறும்போது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். இதனை கருத்தில் கொண்டே இரண்டு சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை உருவாக்கியுள்ளோம். 100 படுக்கைகளுடன் கூடிய மேலும் ஒரு மருத்துவமனை விரைவில் துவங்கப்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனையில் 70 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு ஆக்ஸிஜன், தடுப்பூசி போன்றவற்றிற்கு தட்டுப்பாடு கிடையாது" என தெரிவித்தார்.

Tags:    

Similar News