சாமியார் அருள் வாக்கு - புதையலுக்காக சுரங்கம் அமைத்த கில்லாடிகள்.
போலீசார் கண்ணில் மண்ணை துவி - மண்னை தோண்டிய கில்லாடிகள்...
திருப்பதி சேஷாசலம் மலை அடிவாரத்தில் புதையலுக்காக 80 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி மங்களம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை அலிபிரி போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மங்களம் பகுதியையேட்டியுள்ள சேஷாசல வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் புதையலுக்காக சுரங்கம் தோண்டும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளும் போது சுமார் 80 அடி நீளத்திற்கு கடந்த ஓராண்டாக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த மக்கு நாயுடு மற்றும் 2 கூலித்தொழிலாளி கைது செய்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மக்கு நாயுடு என்பவர் நெல்லூரில் ராமசாமி என்னும் சாமியாரிடம் அருள்வாக்கு கேட்டதாகவும் அவர் இந்த பகுதியில் புதையல் இருப்பதாகவும் தெரிவித்ததாகவும்.
அதை நம்பி கடந்த ஓராண்டாக இந்த சுரங்கப் தோண்டும் பணியை மேற்கொண்டதாகவும், மேலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக மாதந்தோறும் ஒவ்வொரு குழுக்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதியிலிருந்து அழைத்து வந்து இது படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சாமியார் கூறிய அருள் வாக்கை நம்பி வனப்பகுதியில் சுரங்கம் தோண்டிய மக்கு நாயுடு மற்றும் 5 கூலித் தொழிலாளிகளை அலிபிரி போலீசார் கைது செய்தனர். இந்த அடர்ந்த வனப்பகுதி திருப்பதி திருமலை தேவஸ்தானம் விஜிலன்ஸ் குழு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான சோதனைகள் இவர்கள் எப்படி ஓராண்டாக சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டார்கள் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.