புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது.

புதுச்சேரி - கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,465 ஆகவும், உயிரிழப்பு 1,269 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 71,919 பேர் குணமடைந்துள்ளனர்

Update: 2021-05-20 06:07 GMT

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,957 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.

புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டியே இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,957 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,304 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,465 ஆகவும், உயிரிழப்பு 1,269 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 71,919 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News