உலக நோயாளர் நாள்
உலக நோயாளர் நாள் (World Day of the Sick) இது கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் பிப்வரி மாதம் 11ஆம் நாள் கொண்டாடுகின்ற ஒரு சிறப்பு நினைவு ஆகும்;
உலக நோயாளர் நாள் என்றொரு கொண்டாட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் பவுல் மே 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் இதே பிப்ருவரி 11ஆம் நாள் கடைப்பிடிக்க வழிவகுத்தற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. மே மாதம் 13ஆம் நாள் (1917ஆம் ஆண்டு) அன்னை மரியா (இயேசுவின் தாய்) போர்ச்சிக்கல் நாட்டிலுள்ள பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். மே மாதம் 13ஆம் நாள் (1981ஆம் ஆண்டு) தம்மைத் தாக்கிய துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தம் உயிரைக் காத்தது அன்னை மரியாவின் அருளே என்று திருத்தந்தை இரண்டாம் பவுல் பின்னர் கூறினார். அதை அடுத்தே அந்த அன்னையின் நினைவாக மே 13ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து, அன்று 1992ஆம் ஆண்டில் திருத்தந்தை "உலக நோயாளர் நாள்" கொண்டாட்டத்தை ஏற்படுத்தினார்.
பிப்ரவரி 11ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபை பிரான்சு நாட்டு லூர்து நகரில் அன்னை மரியா (இயேசுவின் தாய்) பெர்னதெத் சுபீரு என்னும் பெண்மணிக்குக் காட்சியளித்த நாளைத் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. லூர்து நகரில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்வோர் நோய்களிலிருந்து விடுபட்டுக் குணம் பெற்றதாகச் சான்று பகர்ந்துள்ளார்கள். எனவே திருத்தந்தை இரண்டாம் பவுல் பிப்ருவரி 11ஆம் நாள் "உலக நோயாளர் நாள்" என்று கொண்டாடுவது பொருத்தமே என்று அறிவித்தார்.
மேலும், 1991ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் பவுல் பார்க்கின்சன்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன (2001இல் தான் அச்செய்தி மருத்துவர்களால் உறுதியாக்கப்பட்டு, 2003இல் வத்திக்கான் நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது). எனவே, தாம் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் திருத்தந்தை "உலக நோயாளர் நாள்" என்றொரு ஆண்டு நினைவை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதே.
-மைக்கேல்ராஜ்