சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிக்க வழிகாட்டுதல்கள்

சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிக்க வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.;

Update: 2024-03-08 12:07 GMT

சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பை பாதுகாப்பாக கடைப்பிடிக்க வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ரம்ஜான் நோயின் புனிதம் தொடங்க உள்ளது. நோன்பிருப்பதால் கிடைக்கும் ஆன்மீக பலன்களுடன் கூடவே உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் ரமலான் நோன்பின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீர் மற்றும் உணவு இன்றி பல மணிநேரம் தொடர்ந்து நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை சரியான உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் திறம்பட நிர்வகிக்க முடியும்.

ரமலான் நோன்பு மற்றும் சர்க்கரை நோய்

ரமலான் நோன்பின் போது, முஸ்லிம்கள் 30 நாட்களுக்கு, அதிகாலை முதல் அந்தி சாயும் மாலை வரை நோன்பிருப்பார்கள். நீரிழிவு நோயாளிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான ரமலானை மேற்கொள்ள, சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

ரமலான் நோன்பின் போது ஏற்படக்கூடிய ஆபத்துகள்

குறைந்த ரத்த சர்க்கரை (ஹைபோகிளைசீமியா): சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் நோயில்லாதவர்களுக்கு கூட நோன்பின்போது போதுமான குளுக்கோஸ் இல்லாததால் ரத்த சர்க்கரை அளவு இயல்பை விடக் குறையலாம்.

உயர் ரத்தச் சர்க்கரை (ஹைப்பர்கிளைசீமியா): சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பின்போது சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கீட்டோ அமிலத்தன்மை (Diabetic Ketoacidosis): சர்க்கரை நோயாளிகளுக்கு உணவில் இருந்து குளுக்கோஸ் கிடைக்காதபோது, உடல் கொழுப்பை உடைக்க ஆரம்பிக்கும். கொழுப்பு உடையும் போது உண்டாகும் கீட்டோன்களால் இரத்தம் அமிலமாகிவிடலாம். கவனிக்கப்படாத கீட்டோ அமிலத்தன்மை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

சர்க்கரை நோயாளிகள் நோன்பிருக்க சிறந்த உணவுகள்

சஹூர் (அதிகாலை உணவு): பகல் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய சீரான உணவுகள் அவசியம். மீன், கோழி இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் இவற்றை உட்கொள்ளலாம்.

இஃப்தார் (நோன்பு முடிக்கும் போது உண்ணும் உணவு): சீரான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கும், எண்ணெய் குறைவாக சமைத்த உணவுகளை விரும்பி உண்ணுங்கள். இனிப்புப் பண்டங்களை சாப்பிடுவதை தாமதப்படுத்துங்கள்.


ரமலான் நோன்பின் போது சர்க்கரை நோயினை நிர்வகிப்பதற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணிக்கவும். தொடர் பரிசோதனைகளே பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும்.

தலைச்சுற்றல், பார்வை மங்குதல் அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகளை கவனியுங்கள். அப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே நோன்பை நிறுத்தவும்.

சஹூர் மற்றும் இஃப்தார் நேரங்களில் நிச்சயமாக தண்ணீரை அருந்தி நீர்ச்சத்துடன் இருங்கள்.

வெயில் காலங்களில் அதிக நேரம் வெளியில் தங்குவதைத் தவிர்க்கவும்.

இஃப்தார் நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம். ரத்த சர்க்கரை அளவில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம்.

மிதமான உடற்பயிற்சி உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்க்கவும்.

உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் நோன்பைப் பற்றி பேசுங்கள். ரமலான் காலத்தில் உங்களுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்து மாற்றங்களும் தேவைப்படலாம்.


சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:

மருத்துவரின் ஆலோசனை: ரமலான் நோன்பிருக்க திட்டமிடும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மருந்துகளின் அளவு மற்றும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம்.

தனிப்பட்ட கவனிப்பு: நோன்பின் போது தங்கள் உடல்நிலையை நோயாளிகள் கவனமாக கண்காணிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றங்கள், சோர்வு, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.

தொடர் பயிற்சி: நோன்பின் போதும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிதமான நடைப்பயணம், யோகா போன்ற இலகுவான பயிற்சிகள் சிறந்தவை.

சரியான உணவு: சஹூர் மற்றும் இஃப்தார் நேரங்களில் சத்தான மற்றும் சீரான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

போதுமான தண்ணீர்: நோன்பிருக்கும் நேரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்காமல் இருக்க வேண்டும்.

மன அழுத்தத்தை குறைத்தல்: ரமலான் நோன்பின் போது மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லது.

பொதுவாக, சர்க்கரை நோயாளிகள் ரமலான் நோன்பிருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தங்கள் உடல்நிலையை கண்காணித்து, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

Tags:    

Similar News