மீம்ஸ்..மீம்ஸ்..தீபாவளி மீம்ஸ்ங்க..! படிச்சு ரசிங்க..!
Deepavali Memes in Tamil-எமது வாசகர்களுக்காக மீம்ஸ் உடன் மீம்ஸ் வரலாறும் பதிவிட்டுள்ளோம். படித்து மகிழுங்கள். தீபாவளிக்கு மீம்ஸ் இல்லாமலா..? இதோ உங்களுக்காக..!
Deepavali Memes in Tamil-'மீம்' என்பது பண்டைய கிரேக்க வார்த்தையான 'மைமேமா' என்ற வார்த்தையில் இருந்து உருவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன்பிறகு ஆங்கில மொழியில் 1976ம் ஆண்டில் பரிணாம உயிரியலாளரும் எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவர் ஒரு புத்தகத்தில் இந்த மீம் என்ற சொல்லை அறிமுகபடுத்தினார்.
இன்டர்நெட் மீம்கள் என்பது, இன்று நமக்குத் தெரிந்த பிரபலமான கலாச்சாரமாக உருவிடுத்துள்ளது. அவை முழுவதும் பயனர்களால் இண்டர்நெட்டில் பரப்பப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன மற்றும் மாற்றப்படுகின்றன. மீண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. லிமோர் ஷிஃப்மேன் என்ற ஆய்வாளர் இன்டர்நெட் மீம்ஸ் பற்றிய ஆய்வில் அவர் குறிப்பிடுவது, ஒரு மீம் என்பது சமூக வலை தளங்களில் பரவியிருக்கும் ஒரு யோசனையோ அல்லது மற்றவர்களை நக்கல் செய்யும் புகைப்படமோ அல்ல, மாறாக அவை உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விழிப்புணர்வுடன் இருக்கவும் அவர்களுடன் மொழியை கடந்து எளிமையாக தொடர்புகளை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு மொழி வடிவம் என குறிப்பிடுகிறார்.
முதல் மீம்
இந்த இண்டர்நெட்டில் பதிவிடபட்ட முதல் மீம் என்பது இமோஜி ஆகும். இண்டர்நெட்டின் ஆரம்பகாலத்தில் தகவல்கள் என்பது தற்போதுபோல் பரிமாற்றம் செய்யப்படவில்லை. அன்றைய காலகட்டத்தில் வெறும் எழுத்துகளாகவே இருந்தது. எழுதுபவர் எந்த மனநிலையில் அந்த தகவலை எழுதினார் என்பது படிப்பவருக்குத் தெரியாது. இதனை அறிந்த ஸ்காட் என்ற அமெரிக்க மென்பொறியாளர் தற்போதைய இமோஜிக்கான அடித்தளத்தை 1982-ம் ஆண்டு இமோடிகான் என்ற பெயரில் தொடங்கினார். இதுதான் இண்டர்நெட்டின் முதல் மீம் என கூறப்படுகிறது.
சேவியர் மீம்ஸ்
முன்பெல்லாம் மீம்களை உருவாக்குபவர்கள் ஒரே டெம்ப்லேட்டுகளையே உருவாக்கியிருந்தனர். பிறகு அவர்கள் போடும் மீம் போட்டோகளுக்கு நல்ல சிரிப்பான கமெண்டுகளையும் மீமாக உருவாக்கினர். அப்படி மீம்களில் புது கலாச்சாரத்தை கொண்டுவந்தது, இந்த சேவியர் மீம்ஸ். இந்த போட்டோவில் இருப்பவர் பகலோ பப்பிட்டோ என்ற மீம் பக்கத்தை டிவிட்டரில் வைத்திருந்தார். ஒரு சில காரணங்களினால் டிவிட்டர் நிறுவனம் இவரின் கணக்கை முடக்கியது . இந்த பகலோ பப்பிடோ என்பவர் உண்மையில் யார் என்பது நமக்கு தெரியாது. இந்த ஒரு புகைப்படம் மட்டும்தான் இண்டர்நெட்டை சுற்றி உலா வருகிறது. இவர் டிவிட்டரில் மற்ற மீம்களுக்கு வித்தியாசமான கோணத்தில் கமெணெட் செய்வார் இதனை கண்ட மீம் கிரியேட்டர்ஸ் இவர் கமெண்ட் செய்ததுபோல், அவர்களே மீமை உருவாக்கி அதற்கு இவரின் புகைப்படத்தை வைத்து சேவியர் என்ற பெயரையும் வைத்து பிரபலப்படுத்தினர்.
டோஜ் காயின் நாய்குட்டி
பிரபல மீம்களில் இந்த ஒரு நாய்குட்டியை பார்த்திருக்க வாய்ப்புள்ளது. இந்த நாய்க் குட்டியின் பெயர் ஷீபா ஆகும். இது ஜப்பான் நாட்டில் இருக்கக் கூடிய ஒருவகையான நாய் இனம் ஆகும் . இந்த நாய்க் குட்டி மிக பிரபலமாக காரணம் டோஜ்காயின் எனலாம். இந்த டோஜ் காயின் என்பது பிட்காயின் போலவே ஒரு கண்ணுக்கு தெரியாத பணம் எனலாம். இந்த டோஜ்காயினைப் பற்றி பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டிவிட் செய்ய ஒரே இரவில் இந்த நாய்க் குட்டி உலகமெல்லாம் பிரபமடைந்தது. இதன் உண்மையான புகைப்படம் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.
இதோ மீம்ஸ்..
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2