calcium rich food எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை கால்சியம்....தெரியுமா?...
calcium rich food நம் உடலிலுள்ள தசைகளை இயக்குவதற்கு கால்சியம் சத்தானது அவசியமாகிறது.. மேலும் நம் மூளைக்கு நரம்பு மண்டலம் செய்தியை எடுத்து செல்வதற்கும் கால்சியம்தான் அவசியம் தேவை.
calcium rich food
மனித உடலின் இயக்கத்துக்கு பல தாதுப்பொருட்கள் அவசியமாகிறது. ஒரு சில உறுப்புகளுக்கு அத்தாதுச்சத்துகள் இருந்தால்தான் அதன் செயல்பாடு சிறந்த முறையில் இருக்கும். அந்த வகையில் கால்சியம் தனிமத்தின் சத்தானது நமது உடலில் பெரும் பங்கு வகிக்கிறது.
கால்சியம் என்ற தனிமம் நமது புவிமேலோட்டில் காணப்படும் தனிமங்களில் அளவின் அடிப்படையில் 5வது இடத்தினை கால்சியம் வகிக்கிறது என்பதுதான் அதன் சிறப்பே. உயிரினங்கள் வாழ்வதற்கு கால்சியம் அவசியம் இன்றியமையாத தனிமமாக திகழ்கிறது. உயிரினங்களில் பொதுவாக காணப்படும் உலோகங்களில் கால்சியம் முக்கிய பங்கு வகிப்பதாக அமைகிறது.
மனிதன் நடக்க வேண்டும் என்றால் கூட போதிய கால்சியசத்து அவசியமாகிறது? உங்களுக்குதெரியுமா? காரணம் எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது கால்சிய சத்துதான். அதேபோல் பற்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக கால்சியம் விளங்குகிறது. இதனை சுண்ணாம்புச்சத்து என்று கூட சொல்வதுண்டு. அக்காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் முதல் நகரத்தில் வாழ்ந்தவர்கள் வரை ஒரு விருந்து என்றால் வெத்தலை, பாக்கு , சீவல், சுண்ணாம்பு என தாம்பாளத்தில் வைத்திருப்பர். காரணம் வெற்றிலை போடும்போது அதனுடன் நாம் உபயோகிக்கும் சுண்ணாம்பு கால்சியம்தான்.
அதுமட்டும் அல்லாமல் கிராமப்புறத்தில் வாழ்ந்தவர்களில் பலர் வெற்றிலை பாக்கு , புகையிலை போட்டுக்கொண்டே வயல்வெளிகளில் வேலை பார்ப்பார்கள். இதனால் இவர்களுக்கெல்லாம் அக்காலத்தில் இவர்கள் போடும் வெற்றிலையால் கால்சியம் சத்து அவர்களுடைய உடலில் கூடியது. காலமும் மாறியது. வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இக்கால தலைமுறைகளில் அநாகரிகமாக கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கால்சியம் சத்து குறைவால் பல நோய்களை எதிர்கொள்கிறது இக்கால தலைமுறை. சுண்ணாம்பு இல்லாத பீடாக்கள்தான் தற்போது விருந்துகளில் அளிக்கப்படுவதால் எந்த பிரயோசனமும் இல்லையே.
calcium rich food
மகப்பேறு அடைந்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் கால்சியம் அவசியமானது. இதயத் துடிப்பு மிகவும் துல்லியமாக சீராக இருக்கவும், ரத்தம் உறைவதை துாண்டி வெட்டுக்காயங்களிலிருந்து ரத்தம் வீணாக வெளியேறுவதைத்தடுக்கவும், இக்கால்சியம் பெரிதும் துணைபுரிகிறது.
மேலும் நம் உடலில் பல செயல்பாடுகளுக்கு கால்சியம் அவசியமாகிறது. தசைகளின் விரிதலுக்கும், சுருங்குதல் மற்றும் தசைகளின்இயக்கத்துக்கும், சீராக தசைகள் இயங்குவதற்கும் கால்சியம் அவசியமாகிறத. மேலும் இதய தசையின் நெகிழ்வு, நரம்பு வழிச் செய்திப்பரிமாற்றம் போன்றவற்றிற்கும் கால்சிய சத்து இ ன்றியமையாததாகிறது. நம் உடலில் நடக்கும் வளர்சிதை மாற்ற வினைகளிலும் கால்சியமானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கால்சியம் உட்கவர்தல் என்பது நம் உடலில் நடைபெறும் கால்சியத்தின் செரிமானத்தினைப் பொறுத்தது.அதாவது செரிமானத்தின் போது ஊடகத்தின் தன்மையானது அமிலநிலையா? அல்லது கார நிலையா? என்பதைப் பொறுத்தது.
நாம் உணவாக உட்கொள்ளப்படும் கூடுதல் பாஸ்பேட்டுகள் காரநிலையில் கரைவுறா டிரைகால்சியம் பாஸ்பேட்டாக மாறிவிடுவதாலும், அமில நிலையில் கரைவுறு கால்சியம் பாஸ்பேட்டாக மாறிவிடுவதாலும், கால்சியம் செரிமானத்திற்கு அமில நிலையே சரியானது.
காரநிலையில் குறைந்த அளவு கால்சியம் கூட உடலால் உட்கிரகித்துக்கொள்ளப்படாமல் உபரியாகி விடுகிறது. இவைகள்தான் வெளியேறும்போது சிறுநீரகப்பகுதிகளில் கல்லாக படிகிறது. சிறுநீரக கற்களில் தாழ்ந்த மூலக்கூறுகொண்ட கால்சியம், ஆக்சிலேட், பாஸ்பேட்டுகள், கார்பனேட்டுகள், யுரேட்டுகள் போன்றவையுள்ளன.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல தாதுச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் நம் உடலுக்கு தேவையான கால்சியசத்தினை பெற நாம் கீழ்க்கண்ட உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும்.
நாம் நன்றாக நடக்க ஓட, போதுமான கால்சியம் சத்து நம் உடலில் இருந்தால்தான் அத்தனை உறுப்புகளின் செயல்பாடும் நல்லநிலையில் காணப்படும். நம் உடலிலுள்ள எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. அதேபோல் பற்களுக்கு தேவையான ஆரோக்ய பாதுகாப்பினை கால்சியம்தான் வழங்குகிறது.
கால்சியம் சத்து குறைந்தால்
நம் உடலானது வழக்கமான செயல்பாடுகளுடன் இயங்கி வரும் நிலையில் திடீரென முதுகுவலி, மூட்டுவலி ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால் அந்த நபருக்கு போதுமான கால்சியம் சத்துகுறைந்துவிட்டது என கொள்ளலாம். அதேபோல் எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் தொடர வாய்ப்புகள் அதிகம்.
ஒருசிலருக்கு எதை சாப்பிட்டாலும் ஜூரணமாகாது. இதுபோன்றவர்களுக்கும் போதுமான கால்சியசத்தானது குறைந்து காணப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.அதேபோல் வாயுக்கோளாறு பாதிப்பும்கால்சியம் சத்துகுறைவதால் வருகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நம் உடலிலுள்ள தசைகளை இயக்குவதற்கு கால்சியம் சத்தானது அவசியமாகிறது.. மேலும் நம் மூளைக்கு நரம்பு மண்டலம் செய்தியை எடுத்து செல்வதற்கும் கால்சியம்தான் அவசியம் தேவை. பெரும்பாலும் பெண்கள்தான் இதுபோன்ற கால்சிய சத்துகுறைபாடு நோய்களுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்கள் அந்த அளவிற்கு பாதிப்படைவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
calcium rich food
கால்சியம் உள்ள உணவுகள்
நாம் அன்றாடம் உணவு சாப்பிடும்போது வழக்கமாக காய்கறிகளை உட்கொள்கிறோம். காய்கறிகளிலும் நமக்கு போதுமான தாதுச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. இருந்தாலும்வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வாரம் இரண்டு முறையோ கீரை வகைகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் என்ன தெரியுமா? கீரைவகைகளில்தான்நமக்கு தேவையான கால்சியம் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த வகையில் பசலைக்கீரையில் வழக்கமான கீரைகளை விட அதிக கால்சியம் சத்துநிறைந்துள்ளது. தினமும் கூட கீரை சாப்பிடலாம். இதுமட்டும் அல்லாமல் வாரத்திற்கு இருமுறையாவது கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றில் துவையல் செய்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளிக்கீரையிலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதனையும் நாம் வாரம் ஒருமுறையாவது வழக்கமாக சாப்பிட பழக வேண்டும்.
ஊட்டச்சத்து
பாலில் அதிக அளவு ஊட்டச்சத்து மிகுந்த கால்சியம் நிறைந்துள்ளது. பால் பொருட்களான பால், மோர், தயிர், வெண்ணெய் பாலாடைக்கட்டி ஆகியவைகளில் கால்சியம் சத்து இயற்கையாகவே நிறைந்துள்ளது.எனக்கு பால் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் சோயாபாலைச் சாப்பிடலாம். சோயாபாலில் பசும்பாலில்இருக்கும் கால்சியத்தின் அளவு காணப்படும்.
கசகசாவில் அதிக கால்சியம்
பாதாம்பருப்பில் வைட்டமின் இ சத்து மற்றும் கனிம சத்துகள் அதிகம் உள்ளன. 30 கிராம் பாதாம் பருப்பில் 75மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. குறிப்பாக பெண்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரலாம். அதேபோல் பூசணி விதைகள், எள், கசகசா உள்ளிட்ட விதைகளில் கால்சியம் சத்தானது அதிகம் நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் கசகசாவில் 127 எம்ஜி கால்சியம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உளுந்து பருப்பு வகைகள்
நாம்அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பருப்பு வகைகளை கட்டாயம் சேர்த்துக்கொள் ள வேண்டும். அதேபோல் பீன்ஸ் வகைகளில் சுண்டல் செய்து சாப்பிடலாம். மேலும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மசூர்தால், முதலிய பருப்பு வகைகளை நாம் தினமும் கொஞ்சமாக உணவில் சேர்ப்பது அவசியம் ஆகும்.
லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் தேவையான கால்சியம் பெறலாம். குறிப்பாக, உளுத்தம்பருப்பில் நம் உடலின் எலும்புகளை வலுவாக்கும் சத்தானது நிறைந்துள்ளது. இதில் இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளது.