இன்று அறிமுகமாகும் ஒன்-பிளஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி : சூப்பர் குவலிட்டியாம்

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஏப்ரல் 7 ம் தேதி இந்தியாவிற்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

Update: 2022-04-07 00:14 GMT

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1 எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் டிஸ்ப்ளே அளவோடு வருகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்டிவியானது 3840x2160 பிக்சல்கள் கொண்டது. இந்த ஸ்மார்ட்டிவியன் 10 பிட் டிஸ்ப்ளே மூலம் ஸ்மார்ட்டிவி 1 பில்லியன் வண்ணங்களை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஒன்பிளஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அதன் பிராண்டின் கீழ் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை மாடலான 32 இன்ச் எச்டி டிவி முதல் ப்ரீமியம் 4கே டிவி வரையிலான ஐந்து ஸ்மார்ட்டிவிகளை வழங்கி வருகிறது.


தற்போது ஒன்பிளஸ் ஒய்1 எஸ் ப்ரோ தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்துவன் மூலம் ஸ்மார்ட்டிவி பிரிவில் மேலும் ஒரு சாதனம் இடம்பெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி வெளியீட்டுக்கான பணியில் நிறுவனம் தயாராகி வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியை ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் டிஸ்ப்ளே அளவுடன் வருகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்டிவியானது 3840x2160 பிக்சல்கள் கொண்டது. இந்த ஸ்மார்ட்டிவி 10-பிட் டிஸ்ப்ளே ஆதரவோடு 1 பில்லியன் வண்ண உருவாக்க அம்சத் திறன் உடன் வருகிறது. தற்போது வரும் பிற ஸ்மார்ட்டிவிகளை போன்றே ஒன்பிளஸ் ஒய்1எஸ் ஸ்மார்ட்டிவியும் எச்டிஆர் 10+, எச்டிஆர்10 மற்றும் எச்எல்ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் சமீபத்திய ஸ்மார்ட்டிவியின் படத் தரத்தை பொறுத்தவரை, இது எம்இஎம்சி (மோஷன் மதிப்பீடு மோஷன் இழப்பீடு) ஆதரவு, அதிக தெளிவு, சிறந்த வண்ணங்கள், டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் உள்ளடக்க மேம்படுத்தல் போன்ற ஏஐ இயங்கும் காட்சிகளுடன் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது மென்மையான, யதார்த்தமான வேக காட்சி மேம்பாட்டு அம்சத்தோடு வருகிறது. இந்த ஒன்பிளஸ் சாதனமானது காமா எஞ்சின் காட்சி தரம் மேம்படுத்தல் மற்றும் தெளிவான உள்ளடக்க பட அனுபவத்தோடு வருகிறது.

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு டிவி 10 ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இது இயங்குதளத்தின் பழைய பதிப்பாக இருக்கிறது. உள்ளமைக்கப்பட்ட க்ரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் உடனான கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ப்ளே சேவைக்கான ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு பிரபல பயன்பாடுகளுக்கான 230+ லைவ் சேனல்கள் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்டிவியின் விலை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் விவரக்குறிப்புகள் மற்றும் ஸ்மார்ட்டிவியின் அளவு குறித்து பார்க்கையில் இது சுமார் ரூ.30,000 என்ற விலைப்பிரிவில் வரும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 43 இன்ச் ஒய்1எஸ் ப்ரோ ஸ்மார்ட்டிவியானது 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது கனெக்ட் 2.0 உடன் வருகிறது. ஒன்பிளஸ் வாட்சில் இருந்து டிவி கட்டுப்பாடு, தூக்கத்தை கண்டறிதல், ஸ்மார்ட் வால்யூம் கட்டுப்பாடு, விரைவான மற்றும் எளிதான அழைப்பு, இடைநிறுத்தம் போன்ற பல்வேறு அம்சங்களோடு வருகிறது.

Tags:    

Similar News