அமித்ஷாவை சந்திக்கும் விஜய்? ThalapathyVJTheNumeroUno இது என்ன புது ரூட்டு?

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அரசியலுக்கான வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர். அவ்வப்போது போஸ்டர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.

Update: 2023-06-11 09:15 GMT

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இப்போது அவர் தமிழகம் வரும் அமித்ஷாவைச் சந்திப்பார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. இதனால் அவரின் அரசியல் பார்வை மீது இளைஞர்களில் பலர் சந்தேகம் கொள்கின்றனர்.

நேற்று சென்னை வருகை தந்த அமித்ஷாவை திரை பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் என வரிசையாக அமித்ஷாவை சந்தித்து வர இப்போது விஜய்யும் அமித்ஷாவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தளபதி விஜய் தி நியூமரோ யுனோ எனும் ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. இதற்கு அதிசிறந்த, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதிக பிரபலமானவர் என்று பொருள்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22ம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதனால் ஜூன் மாதம் முழுவதும் விஜய் பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு விஜய்யும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

வரும் வாரம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது, இளம் வாக்காளர்களை குறி வைத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பது என அரசியலுக்கு வரும் நோக்கத்துடனேயே விஜய் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அரசியலுக்கான வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர். அவ்வப்போது போஸ்டர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.

ஐசரி கணேசன், ஜிவி பிரகாஷ் ஆகியோரைத் தொடர்ந்து விஜய்யும் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் என்கிறார்கள். இதனால் விஜய் கட்சி ஆரம்பித்தால் பாஜகவுடன் சேர்ந்து இயங்குவார் என்பது போல கூறப்படுகிறது. 

Tags:    

Similar News