டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய எலான் மஸ்க்

சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்;

Update: 2022-05-14 08:39 GMT

எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் உறுதியாகியிருந்த நிலையில், அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளாா்.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கைப்பற்ற வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை எலான் மஸ்க் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். மேலும், ட்விட்டரில் ஒருவர் தவறாக கருத்து தெரிவித்து இருந்தால் அதனை திருத்தும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அவர் வாங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. டுவிட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானது.

இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டருடனான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உண்மையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான பயனர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட செய்தி வெளியானதால் டுவிட்டரின் பங்கு விலை 19 சதவீதமாக சரிந்துள்ளது.

Tags:    

Similar News