பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்தது கட்டணத்தை உயர்த்தும் போக்குவரத்து சேவை நிறுவனங்கள்

Update: 2022-04-13 06:46 GMT

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் போக்குவரத்து சேவை நிறுவனங்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேறு வழியில்லாமல் முன்னனி நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை 12 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடத்தில் எரிபொருள் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் டெல்லி- என்சிஆர், கொல்கத்தா பகுதியில் டாக்ஸி கட்டணம் 12 சதவீதமும், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 15 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News