பெட்ரோல் விலை மீண்டும் உயர்வா? இன்றைய நிலவரம் இதோ

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, இன்று எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய விலையில் விற்பனையாகிறது.;

Update: 2021-10-18 01:30 GMT

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், கனரக வாகனம் இயக்குவோர் கவலையடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. அதன்படி, சென்னை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 98.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பிற நகரங்களில் இந்த விலையில் சற்று மாறுபாடும். 

Tags:    

Similar News