பழைய தங்க நகைகளின் தரம் அறிய கட்டணம் இல்லை - தனிஷ்க் ஜூவல்லரி..!

டாட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற தங்க நகை விற்பனை நிலையம் தனிஷ்க் , ஆண்டு முழுவதும் தங்கப் பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.;

Update: 2024-06-07 13:30 GMT

பிரபல தங்க நகை விற்பனை நிலையமான தனிஷ்க் , 100% தங்கப் பரிமாற்றத் திட்டம் பழைய தங்கத்திற்கான அதிகபட்ச மதிப்பை வழங்குவதாக கூறி அதன் திட்ட உரை விளக்கம் அளித்த காஞ்சிபுரம் கிளை முகவர் சித்ராசிவகுமார் .

பழைய தங்க நகைகளின் தரம் எவ்வித கட்டணமும் இன்றி ஆய்வு செய்து கொள்ளவும் , தங்க பரிமாற்ற திட்டத்தின் கீழ் அதிகபட்ச மதிப்பு பெறலாம் என புகழ்பெற்ற தங்க நகை விற்பனை நிலையம் ஆன தனிஷ்க் அறிவித்துள்ளதாக அதன் காஞ்சி கிளை முகவர் சித்ரா சிவகுமார் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தில் தங்கமான தங்க நகை பிராண்டான தனிஷ்க் 20 ஆண்டுகளுக்கு மேலாக 240 நகரங்களில் 400 க்கும் மேற்பட்ட தங்க நகை விற்பனை நிலைய கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தூய்மையான தங்கம் மற்றும் நாகரீகத்திற்கு ஏற்ப வடிவமைப்புகள் என அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையும் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் வேளையில் தனிஷ்க் ஜுவல்லரி சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் காஞ்சிபுரம் தனிஷ்க் கிளை முகவரான திருமதி சித்ரா சிவகுமார் கூறுகையில் , வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது கோல்ட் எக்ஸ்சேஞ்ச் பாலிசியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளதாகவும், பழைய தங்கத்திற்கு அதிகபட்சமான மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாது, கழிவே அல்லாது புதிய வடிவமைப்புகளை கொண்ட தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்திக் கொள்ள இது சிறந்த தருணமாக விளங்கும்.

மேலும் தங்களது தங்க நகைகளின் தரம் மதிப்பீட்டினை அறிய இங்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் நகை விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் எந்த ஒரு நகைக்கடையில் இருந்தும் வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க் அளித்து புதிய ஆபரணங்களாக மாற்றிக் கொள்ளலாம்,  வாடிக்கையாளர்கள் எளிமையான முறையிலும் சவுகரியமாகவும் ஆண்டு முழுவதும் தங்க நகைகளை எக்சேஞ்ச் செய்து கொள்ளும் அசத்தலான சேவையும் வழங்கப்படுகிறதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மண்டல தலைவர் அரசு , காஞ்சி கிளை மேலாளர் ரூப் ஆனந்த் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News