டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80ஆக குறைந்தது

வர்த்தகர்கள் இந்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கிக் கூட்டங்களில் கவனம் செலுத்துவதால், செவ்வாயன்று முதல் முறையாக ஒரு டாலருக்கு 80 ரூபாயை எட்டியது

Update: 2022-07-19 04:45 GMT

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ஆக குறைந்துள்ளது. ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தொடர்ந்து நிறுத்தக் கூடும் என்ற அச்சத்தின் பின்னணியில் ஒரே இரவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்துள்ளது

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, உள்நாட்டு நாணயம் முந்தையதை விட 0.04% சரிந்து ஒரு டாலருக்கு 80.01 ஆக இருந்தது. 2022ல் இதுவரை 7.6% குறைந்துள்ளது.

எஃப்.பி.ஐ வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விற்பனையாளர்களின் தேவை காரணமாக நேற்று ஒரு பெரிய சரிவைச் சந்தித்த ரூபாயின் மதிப்பு 80க்கு மேல் தொடங்கியது

Tags:    

Similar News