மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது

கடந்த ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் மீதான தடை கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு நீக்கப்படுகிறது.

Update: 2022-06-17 05:33 GMT

மாஸ்டர்கார்டு ஆசியா/பசிபிக் பிடிஇ இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவு சேமிப்பக விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதற்காக  இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு புதிய டெபிட், கிரெடிட் அல்லது ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கு Mastercard , American Express மற்றும் Diners Club ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு காலவரையின்றி தடை விதித்தது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றுவதாக அந்நிறுவனம் உறுதியளித்ததை தொடர்ந்து மாஸ்டர்கார்டு மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியது .

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைனர்ஸ் கிளப் மீதான வணிகக் கட்டுப்பாடுகள் நாட்டில் நடைமுறையில் உள்ளன, இருப்பினும் அவை ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர் தளத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

Tags:    

Similar News