சர்க்கரை ஏற்றுமதியில் அசுர வளர்ச்சி: இந்தியா சாதனை

2013-14-ம் ஆண்டில் இருந்து நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 291% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

Update: 2022-04-19 03:23 GMT

கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 1,177 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 2021-22-ம் நிதியாண்டில் 4600 மில்லியன் அமெரிக்க டாலராக 291% அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகத்தின் தரவுகளின்படி, இந்தியா உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

சர்க்கரை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 2021-22-ம் ஆண்டில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக சரக்கு கட்டணங்கள், கொள்கலன் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் மற்றும் COVID19 தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சாதனை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகளாவிய சந்தைகளை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் உதவிடும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News