மும்பை வழியாக சரக்குகள் ஏற்றுமதி: கோவை, திருப்பூருக்கு புதிய வசதி

கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர், சரக்குகளை மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் புதிய வசதி கிடைத்துள்ளது.;

Update: 2022-03-12 06:30 GMT

கோப்பு படம் 

தொழில் நகரங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருந்து, வெளி நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுவரை, கொச்சி, துாத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாகவே சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு சிக்கல்கள் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், திருப்பூர், கோவை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வகையில், கோவை இருகூரில் அமைந்துள்ள கன்டெய்னர் கார்ப்பரேஷன்கிடங்கில் இருந்து, நேரடியாக சரக்குகளை மும்பை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

இது குறித்து, கோவை சுங்கத்துறை மற்றும் கப்பல்துறை முகவர் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், இதனால் பயண நேரம் மிச்சமாகும். இவ்வாய்ப்பை, கோவை, திருப்பூர் தொழில் துறையினர் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News