வாய் பிளக்காதிங்க! அட்சய திருதியை நாளில் இவ்ளோ தங்கம் விற்பனையா?
அட்சய திருதியை நாளான நேற்று மட்டும் தமிழகத்தில், 2019ம் ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் தங்கம் விற்பனையாகி இருக்கிறது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், வீட்டில் தங்கமும் வளமும் செல்வமும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே, அன்றைய நாளில் தங்கம் வாங்குவதில், வசதி வாய்ப்புள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அட்சய திருதியை நாளான நேற்று, தமிழகத்தில் வழக்கம் போல் தங்கம் விற்பனை சூடு பறந்தது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், நேற்று தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையாகி இருப்பதாக, தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனையானது, கடந்த 2019ம் ஆண்டைவிட 30 சதவீதம் விற்பனை அதிகம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் காரணமாக, 2020 மற்றும் 2021ல் அட்சய திருதியை தங்கம் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.