தங்கம் விலை அதிரடி உயர்வு... நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.;
தங்கம் மற்றும் வெள்ளியின் நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலையில் ஏற்றம் இருந்து வருகிறது. இடையில் சில நாட்கள் குறைந்தாலும் பெரும்பாலும் உயர்ந்தே வருகிறது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 5ரூபாய் உயர்ந்துள்ளது. இப்போது 5480 ரூபாய்க்கு 1 கிராம் விற்கப்பட்டு வருகிறது. ஒரு சவரன் 43840 ரூபாயாக விற்கப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4489ரூபாயாக இருக்கிறது. சவரனுக்கு 32 ரூபாய் உயர்வாகும். இதனால் ஒரு சவரன் 35912 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து 1 கிராம் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.