ஆரம்பமே இப்படியா? அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

வாரத்தின் முதல் நாளிலேயே இப்படியா? அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை உயர்வு;

Update: 2023-08-21 08:45 GMT

மீண்டும் தங்க விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

ஆவணி மாதம் பிறந்ததையடுத்து இந்த மாத தொடக்கத்தில் குறைந்த வந்த தங்கத்தின் இந்த வாரம் துவக்கத்திலேயே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகளை கலக்கத்தில் இருக்கின்றனர். தங்கம் விலை உயர்ந்ததால் முதலீடு செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் தங்கம் ஒரு கிராம் 5,450 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று காலை மீண்டும் உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய தினம் ஒரு கிராம் 5,455 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 43,640 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ள 24 கேரட் தங்கம் , ஒரு கிராம் 5,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 47,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. தற்போதைய அளவில் ஒரு கிராம் வெள்ளி 76.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 76,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது விலை அதிகரித்திருப்பது பெண்களுக்கு கொஞ்சம் கவலையைத் தந்துள்ளது. 

Tags:    

Similar News