தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது; ஒரு சவரன் ரூ.38,160 ஆக விற்கப்படுகிறது.

Update: 2022-06-08 07:15 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது; ஒரு சவரன் ரூ.38,160 ஆக விற்கப்படுகிறது.

சமீப காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனையானது. பின்னர், அதன் விலை ஏறியது.

ஆபரணத் தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து இருந்தது. ஆனால், இன்று தங்கம் விலை சவரனுக்கு 80- ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,160- ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.68.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.68,000-க்கும் விற்பனையாகி வருகிறது. 

Tags:    

Similar News