அடிமேல் அடி! சமையல் கேஸ் விலை அதிரடியாக ரூ. 268 உயர்வு

பெட்ரோல், டீசல் உயர்ந்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 268.50 உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-01 03:15 GMT

பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆறுதலாக, இன்று மட்டும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

இச்சூழலில், சிலிண்டர் விலை கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 268 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்று, 965 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Tags:    

Similar News