எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: அரசுக்கு ரூ.21,000 கோடி வருமானம்

எல்ஐசி பங்குகளை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது;

facebooktwitter-grey
Update: 2022-05-19 02:32 GMT
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: அரசுக்கு ரூ.21,000 கோடி வருமானம்
  • whatsapp icon

எல்ஐசி பங்குகலில் சிறு அளவிலான பங்குகளை விற்பதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் எல்ஐசி பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ஒரு லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. எல்சிஐ பங்கு விற்பனையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், அதன் லாபம் முழுவதும் இந்த நாட்டிலுள்ள வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கு மட்டுமே பயன்பட வழிவகுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எல்ஐசி பங்குகளை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 21,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தற்போது ரூ. 900 என்ற அளவில் பங்கு சந்தையில் வர்த்தகம் ஆகிவருகிறது.

எல்ஐசி பங்குகள் சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் எல்ஐசி பங்கு விலை உயராததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எல்ஐசி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 42 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபாய் 6 லட்சம் கோடியாக மதிப்பிட்டு இருந்த எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூபாய் 5.57 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது

நேற்று எல்ஐசியின் பங்குகள் சிறிய மாற்றத்துடன் முடிவடைந்தன. எல்ஐசி பங்குகள் 0.09 சதவீதம் உயர்ந்து, பிஎஸ்இயில் பங்கு ரூ.876.25-ல் முடிந்தது. மறுபுறம் NSE இல், 0.06 சதவீதம் குறைந்து 874.75 ரூபாயில் முடிந்தது.

Tags:    

Similar News