அதிக பெட்டகங்களை கையாண்ட டாப் 5-ல் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள்
கடந்த 2021- 2022 நிதியாண்டில், குஜராத்தின் முந்த்ரா துறைமுகம், இந்தியாவின் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. இதில் முதல் 5 இடங்களில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன.;
இது தொடர்பாக, போர்ட் டெக்னாலஜியை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள புள்ளி விவரங்களின்படி, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் 4,900,000 பெட்டகங்களை (20 அடி உயரமுள்ள கொள்கலன்) கையாண்டுள்ளது.
அதை தொடர்ந்து, நவி மும்பையில் உள்ள ஜஹவர்லால் நேரு போர்ட் ட்ரஸ்ட், 4,177,211 சரக்கு பெட்டகங்களையும், சென்னை துறைமுகம் 970,583 பெட்டகங்களையும் கையாண்டுள்ளன.
மேலும், தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் 593,090, கொல்கத்தா துறைமுகம், 557,000 சரக்கு பெட்டகங்களை, 2021- 2022ஆம் நிதியாண்டில் கையாண்டுள்ளன.