ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து அனில் அம்பானி விலகல்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகினார்;

Update: 2022-03-26 08:07 GMT

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி எந்த ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள கூடாது என சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உத்தரவிட்டிருந்தது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அனில் அம்பானி உட்பட மேலும் 3 பேர் மீது சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடவடிக்கை எடுத்தது.

அதில், அனில் அம்பானி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் பொதுமக்கள் தொடர்புடைய எந்த நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்க தடை விதித்தது. இதன் காராணமாக ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு இயக்குநர் பொறுப்புகளில் இருந்து அனில் அம்பானி விலகினார். அவருக்கு பதிலாக ராகுல் சரின் என்பவர் ரிலையன்ஸ் பவர் மற்றும் உள்கட்டமைப்பின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News