அடுத்தாண்டு ஏற்றுமதி இலக்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் -பியூஷ் கோயல்

அடுத்தாண்டு ஏற்றுமதி இலக்கை 450 முதல் 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும்: ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலில் பியூஷ் கோயல்;

Update: 2021-10-09 17:00 GMT

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்

அடுத்த ஆண்டு ஏற்றுமதி மதிப்பை 450 முதல் 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலிடம் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.

ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர்களுடன் இடைக்கால ஆய்வு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை விரைவில் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 197 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 48 சதவீத இலக்கு அடையப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது ஏற்றுமதியாளர்கள், அனைத்து இந்தியர்களையும் பெருமையடைச் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏற்றுமதி இலக்கை 450 முதல் 500 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இன்ஜினியரிங் பொருட்களின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. ஜவுளி ஏற்றுமதி 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று பியூஷ் கோயல் கூறினார்.

வர்த்தகத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் பேசுகையில், ''ஏற்றுமதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்'' என்றார்.

Tags:    

Similar News