'காப்பர்' தொழிலில் களமிறங்கும் அதானி குழுமம்
இந்தியாவின் உலோக உற்பத்தியை அதிகரிக்க அதானி குழுமத்தின் 1.2 பில்லியன் டாலர் தாமிர ஆலை மார்ச் இறுதிக்குள் முதல் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கும்.;
இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி . இவரது அதானி குழுமம் பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம், துறைமுக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.
இவை தவிர, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம், மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானம், சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.
இந்நிலையில், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.
கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான குழு, குஜராத்தில் உள்ள முந்த்ராவில் உலகின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி ஆலையை ஒரே இடத்தில் உருவாக்கி வருகிறது. இந்த ஆலை இந்தியாவின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஆற்றல் மாற்றத்திற்கு உதவும்.
1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த வசதி மார்ச் இறுதிக்குள் முதல் கட்ட செயல்பாடுகளைத் தொடங்கும். இது 2029 ஆம் ஆண்டுக்குள் அதன் முழு அளவிலான 1 மில்லியன் டன் கொள்ளளவை எட்டும்.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாறுவதற்கு முக்கியமான உலோகமான தாமிரத்தின் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தும் சீனா மற்றும் பிற நாடுகளுடன் இந்தியா இணைகிறது.
இது முழு செயல்பாட்டிற்கு வந்ததும் காப்பர் தேவைக்காக அயல்நாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை பெருமளவு குறைந்து விடும்.
சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. 2029 வருட காலகட்டத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டவுள்ளது.
ஒவ்வொரு நாட்டிற்கும் படிம எரிபொருள் சார்பு நிலையில் இருந்து பசுமை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற தேவைப்படும் கட்டமைப்பிற்கும், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சோலார் செல்கள், பேட்டரிகள், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தின் உருவாக்கத்திற்கும் காப்பர் தேவைப்படுகிறது.
இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட, 4 லட்சம் டன்கள் உற்பத்தி திறன் படைத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதன் உரிமையாளரான வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது. அதானியின் தாமிர ஆலை தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நீண்ட காலமாக மூடப்பட்ட 400,000 டன் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா லிமிடெட் முயற்சிக்கும் நேரத்தில் வருகிறது. நாட்டின் மிகப்பெரிய தாமிர உருக்காலை தற்போது ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.
எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு அடுத்த நிலையில் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படும் உலோகமாக காப்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, உலகின் பெருமளவு காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சிலி மற்றும் பெரு ஆகிய இரு நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.