Lalithaa Jewellery Showroom in erodeதங்கம் மற்றும் வைர நகைகளின் சங்கமம் ஈரோடு லலிதா ஜூவல்லரி மார்ட்

Lalithaa Jewellery Showroom in erodeஈரோடு லலிதா ஜூவல்லரி மார்ட் தங்கம் மற்றும் வைர நகைகளின் சங்கமமாக திகழ்கிறது.;

Update: 2023-08-31 15:09 GMT

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, லலிதா ஜூவல்லரி தென்னிந்தியா முழுவதும் நகை வாங்குபவர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றுள்ளது. வடிவமைப்புகளின் நேர்த்தியானது ஒரு வலிமையான காரணியாக இருந்தாலும், விலை நிர்ணயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் சந்தையின் குறைந்த சேதாரம் போன்றவை லலிதா ஜூவல்லரியின் சிறப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


நகை கடை விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் மட்டுமே விளம்பர தூதுவராக நடித்து வந்த காலத்தில் அதற்கும் முடிவு கட்டியர்  இதன் உரிமையாளரான கிரண் குமார் என்று சொன்னால் மிகையாகாது. சிரித்த முகத்துடன் அவர் தனது நகை கடையின் சிறப்பை எடுத்துக்கூறுவது அலாதியான ஒரு விளம்பரம் தான். மற்ற நகை கடைகளில் தில்லு முல்லு நடைபெறுவதாக அவர் கூறும் காரணங்களுக்கு தொழில் போட்டி தான் என கருதினாலும் கூட அதற்கு இதுவரை யாரும் போட்டி விளம்பரம் செய்யவில்லை.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி அனைத்து முக்கிய நகரங்களிலும் லலிதா ஜூவல்லரி மார்ட் நகை கடைகள் உள்ளன. அந்த வகையில் ஈரோடு நகரில் லலிதா ஜூவல்லரி நகை கடை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 


ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் எதிரில் 57ஏ ,ஆர்.கே.வி ரோடு என்ற முகவரியில் லலிதா ஜூவல்லரி மார்ட் நகை கடை இயங்கி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த கடை காலை 9.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 9.15 மணி வரை இடைவேளை இன்றி இந்த கடை திறந்து இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடை திறந்திருக்கும் நேரம் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

லலிதா ஜூவல்லரி நகைக்கடையை பொறுத்தவரை ரொக்கமாகவும் நகைகள் வாங்கலாம் மற்றும் மாஸ்டர் கார்டு, விசா கார்டு, டெபிட்கார்டு ஆகியவற்றிலும் நகைகள் வாங்க முடியும். காசோலைகள் அமெக்ஸ் கார்டு போன்றவையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் தங்கம், பிளாட்டினம், வைரம் வெள்ளி ஆகியவற்றில் நகைகளை வாங்குவதற்கு தனித்தனி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளரையும் பிரத்தியேகமாக கவனிக்கும் விற்பனையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கான அலுவலர்களின் உபசரிப்பு என்பது மற்ற எந்த கடைகளிலும் காண முடியாத ஒரு உபசரிப்பு என்பதை இங்கு வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் கூறி வருகிறார்கள்.

விதவிதமான தங்க நகைகள் செயின், மோதிரம்,  தோடு ,கம்மல் மற்றும் விதவிதமான வளையல்கள் இக்கடையின் சிறப்பு அம்சம். இது தவிர பூஜைஅறையில் வைப்பதற்கான தங்கள் வெள்ளி சுவாமி சிலைகள் மற்றும் பூஜை செய்வதற்கான சாதனங்களும் இங்குகிடைக்கும். ஈரோடு லலிதா ஜுவல்லரியின் இன்றைய தங்கம் விலை விபரம். தங்கம் ஒரு கிராம் ரூ. 5,550 ,வெள்ளி ஒரு கிராம் 80. 70

Tags:    

Similar News