22 கேரட் ஆபரணத் தங்கம் பவுன் 38,336 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து 38,336 ரூபாய்க்கு இன்று விற்பனையானது.

Update: 2022-07-02 08:06 GMT

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,792க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்ம் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.38,336-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து, கிராம் ரூ.63.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News