2000ரூ நோட்டு கடந்து வந்த பாதை! மறக்கக்கூடிய நிகழ்வுகளா இது?
2000 Note News Tamil-2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
2000 Note News Tamil-⊕ பணமதிப்பிழப்பு நடவடிக்கை சமீப கால வரலாற்றில் இந்தியாவில் எடுக்கப்பட்ட நிதி சம்பந்தமான அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கை காரணமாக பல மாதங்கள் அடிமட்டத்திலிருந்து நடுத்தர வர்க்கத்து மக்கள் வரை அனைவரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
⊕ நவம்பர் 2016ம் ஆண்டு புதிய இந்தியா பிறந்துள்ளதாக அறிவித்த மத்திய அரசு 500ரூ, 1000 ரூ நோட்டுகளை செல்லாதவையாக அறிவித்தது. இதனால் பழைய 500ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.
⊕ அதிரடி நடவடிக்கை என பாராட்டப்பட்ட இந்த பணமதிப்பிழப்பால் பழைய நோட்டுகளை மாற்றவும் புதிய நோட்டுகளைப் பெறவும் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்.
⊕ இளஞ்சிவப்பு நிறத்தில் காண்பதற்கு அழகாக தோற்றமளிக்கும் 2000 ரூபாய் ஆரம்பத்தில் பலரால் தேடித் தேடி வாங்கப்பட்டது. ஆனால் சில வாரங்களிலேயே இந்த நோட்டுக்கு சில்லறை கிடைக்கவில்லை என்று கூறி பெரும்பாலான உணவகங்கள், பேக்கரிகள், சிறிய, நடுத்தர வியாபாரிகள் என பலரிடம் இந்த நோட்டுகள் வாங்க மறுக்கப்பட்டது.
⊕ 2016 - 17ம் நிதி ஆண்டில் மொத்தம் 35 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
⊕ இதுவே 2017-18ம் நிதி ஆண்டில் 11 கோடியாக குறைக்கப்பட்டது. இது மிகப்பெரிய வித்தியாசமானதாக இருக்கிறது.
⊕ மார்ச் 30, 2018 வரையில் 336 கோடி எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால் அச்சடிக்கப்பட்ட நோட்டுகளுக்கும் அரசு கணக்கில் இருந்த நோட்டுகளுக்கும் இருக்கும் எண்ணிக்கையில் வித்தியாசங்கள் உண்டு.
⊕ அடுத்ததாக 2018-19ம் நிதி ஆண்டில் 4.6 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
⊕ பிப்ரவரி 26, 2021 வரை 249 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
⊕ 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக எந்த 2000 ரூபாய் நோட்டும் அச்சடிக்கப்பட்டதாக தகவல் இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2