இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று 90 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடடு வருகிறது. இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு 2,89,96,473 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 2123 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,51,309 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,82,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 13, லட்சத்து 3 ஆயிரத்து 702 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 23 கோடியே 61 லட்சத்து 98 ஆயிரத்து 726 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.