திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.;

Update: 2021-05-02 02:33 GMT

திண்டுக்கல் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மாங்கரை அம்மாபேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளாக பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2673 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன

வேட்பாளர்களின் முகவர்கள் ஊடகத்தினர் உள்ளிட்டோர பலத்த சோதனைக்கு பின்பு போலீசாரால் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் முகவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை சோதனை செய்யப்பட்டு அதனை தவிர வேறு எதையும் உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

Tags:    

Similar News