கோடை உழவு: விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் முக்கிய அறிவிப்பு
திருச்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது/ சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை ஆகும்.
கோடைகாலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. சிற்றூர்களில் கிணற்று பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உணவு செய்ய வேண்டும்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழை பெய்யும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிர் சாகுபடி நடைமுறையில் உள்ளது முதல் பயிர் சாகுபடி ஆனி ,ஆடி மாதங்களில் தொடங்கி இரண்டாவது பயிர் தைமாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி, வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது.
அப்போது வயலை உழுது புழுதி காலாக செய்ய வேண்டும். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள் மற்றும் பூஞ்சான்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
அடுத்தடுத்த பயிர் சாகுபடியில் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வித்துகள் மற்றும் பூஞ்சை நுண்ணுயிர்கள் இருக்கின்றன. கோடை உழவு மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை 100 சதவீதம் புழுக்களை கட்டுப்படுத்தும். ஆழமாக உழுவதால் களைகள் வேரோடு வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu