நம்மாழ்வார் பிறந்தநாள்: உடுமலைப்பேட்டையில் மரபு விதை கண்காட்சி

நம்மாழ்வார் பிறந்தநாள்: உடுமலைப்பேட்டையில் மரபு விதை கண்காட்சி
X

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மரபு விதைகள். 

நம்மாழ்வாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு, உடுமலைப்பேட்டையில், மரபு விதை கண்காட்சி நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை குரல்குட்டையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், 84வது பிறந்தநாளையொட்டி, ஈகை மக்கள் தன்னார்வக்குழு சார்பில், மரபு விதை கண்காட்சி நடந்தது.

இக்குழுவினர் உடுமலை பகுதியில் உள்ள, பாரம்பரிய விதை ரகங்கள் குறித்து ஆய்வு செய்து, அவ்விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், உடுமலை சம்பா கத்தரி, உருண்டை கத்தரி, கொடி உருளை உள்ளிட்ட ரகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுபோல், இம்மண்ணுக்குரிய பாரம்பரிய நெல் ரகங்களும் இக்குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடைப்பெற்ற கண்காட்சியில், பாரம்பரிய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஈகை மக்கள் தன்னார்வ குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!